அலோ குட்டீஸ், போன மாதம் மாடல் போட்டு வரைஞ்சு பாத்தீங்களா? இன்னும் நல்லா பயிற்சி எடுத்துக்கோங்க. லீவுதானே. ஓகே… இந்த மாதம் கலர்களை பத்தி கொஞ்சம் பேசலாம்.

            வண்ணம், கலர் என்றால் என்ன? வெண்மை என்பது நிறமற்றதா? உண்மையில் வெண்மை என்பதே அடிப்படை கலர். இதில்தான் அனைத்து  வண்ணங்களும் மறைந்து இருக்கு.  வானவில் பாத்திருக்கீங்களா? அதில் ஏழு வண்ணங்கள் இருக்கும். வென்மையின் நிறப்பிரிதலில் அவை நம் கண்ணுக்கு தெரியும். அதான் அடிப்படை வண்ணங்கள்.

kirukkar3.1

            நம் ஊரில் காய்கறிகளை பத்தி பேசும்போது, நாட்டுக்காய், இங்லீஷ் காய் அப்படீன்னு எல்லாம் கேட்ருப்பீங்க. நாம் பாரம்பரியமாய் பயன்படுத்தும் காய்கள் நாட்டுக்காய் என்றும், புதிதாக சமீபமாக பயன்படுத்தும் காய்களை வெளிநாட்டு காய் என்றும் சொல்லுவாங்க. நிஜத்தில் தக்காளி, மிளகாய் கூட வெளிநாட்டு வரவுதான் என்பது பற்றி படிச்சுபாருங்க.

            இதேபோல வண்ணங்களிலும் சொல்லப்படுவதை கேட்ருப்பீங்க. நம் கலர். இங்லீஷ் கலர் அப்படி. உண்மையில் இப்படி வண்ணங்களை பிரிக்கலாமா? ஏன் இப்படி சொல்றாங்க? விடை எளிது. நம் நாட்டில் பழைய காலத்தில் துணிகளுக்கு சாயம் போட, வரைய இயற்கையாய் கிடைக்கும் வண்ணங்களை பயன்படுத்தி சில வண்ணக்கலவை மட்டுமே உருவாக்குவாங்க. அதில் கிடைக்காத கலர்களை நாம் இங்லீஷ் கலர் என்று சொல்றோம்.

            வண்ணங்கள் அனைவருக்கும் பொது.

kirukkar3.2

            இந்த மாதம் இதை பார்ப்போம். நீங்கள் உங்க அப்பா அம்மாகிட்ட சொல்லி ஒரு வாட்டர்கலர் பாக்ஸ் வாங்கவும். அதில் 12 கலர் இருக்கும். ஒரு சின்ன அட்டை எடுத்துக்கோங்க. முதலில் ஒரு கலர், அதாவது மஞ்சள் என்று வச்சுக்குவோம். அதில் கொஞ்சம் கலக்கி அட்டையில் ஒரு வட்டம் அளவு வைங்க. அது போல ஒரு பத்து புள்ளி வைக்கவும். இப்போ மற்ற கலர்கள், அதாவது மஞ்சள் தவிர மீதம் இருக்கும் கலர்களை ஒவ்வொன்றாக கலக்கி ஏற்கனவே வைத்த மஞ்சள் புள்ளி கலருடன் தனித்தனியாக கலக்கி பாருங்க. நமக்கு பலவிதமான கலர்கள் கிடைக்கும். இப்படி ஒவ்வொரு கலரையும் மற்றதுடன் கலந்து நூற்றுக்கணக்கான கலர்களை உருவாக்கலாம். அளவு மாற்றி உபயோகிப்பதன் மூலம் கோடிக்கணக்கான வண்ணங்கள் கிடைக்கும். இதான் அதிசயம்.

Kirukkar3.3

            அடுத்து, சாயந்திர நேரத்தில் வானத்தை பாருங்க. ஒவ்வொரு நாளும் பலவிதமான வண்ணங்களில் மாறும். பார்க்கப் பார்க்க அதிசயமாக இருக்கும். அங்கே கிடைக்கும் வண்ணங்களின் சங்கமம் நம் மனதுக்கு மிகவும் அமைதியை தரும். அப்பா, அம்மாவிடம் சொல்லி ஏதாவது ஒரு நாள் ஒரு ஃபோட்டோ எடுங்க. அதை பார்த்து ஒரு சார்ட் அட்டையில் வரையவும். இதில் நல்ல விஷயம் என்னன்னா, வண்ணங்களின் பலவிதமான கலவையை நாம் உருவாக்கி பயன்படுத்தலாம். அதோடு தப்பா வரைஞ்சாலும் கண்டுபிடிக்கமுடியாது…ஹா..ஹா.

Kirukkar3.4

            என்ன குட்டீஸ் செய்றீங்களா… ரைட்டு.. கலக்குங்க. அடுத்த மாதம் வேற எதாவது பேசுவோம். உங்கள் சந்தேகங்கள், கருத்துக்களை போடுங்க.

தொடரும்…

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments