ஒரு ஊரில் ஒரு குளம் இருந்துச்சு. அங்க நிறைய மீன், நண்டு, ஆமை எல்லாம் இருந்துச்சு. ஆடு, மாடு எல்லாம் தண்ணீர் குடிக்க குளத்துக்குத்தான் வரணும்.

ஒரு குட்டி ஆட்டை கபிலன் வளர்த்துட்டு வந்தான். அவன் மூன்றாம் வகுப்பு படிக்கிறான். பள்ளிக்கூடம் முடிந்து வீட்டுக்கு வந்தவுடன், ஆட்டை குளத்துக்குக் கூட்டிட்டு வந்து குளிக்க வைப்பான்.

கோடை காலம் ஆரம்பித்தது. குளத்தில் தண்ணீர் குறைந்து காணப்பட்டது. நண்டும், ஆமையும் வேறு குளம் நோக்கி நகர்ந்து சென்றன. மீன்கள் கவலையாகப் பேசிக்கொண்டிருந்ததை கபிலன் கேட்டான்.

“என்னாச்சு? ஏன் எல்லோரும் கவலையா இருக்கீங்க?”

“குளத்தில் தண்ணீர் வற்றிப் போயிடுச்சு. எங்களால் விளையாட முடியல. இன்னும் வெயில் ஏற, ஏற தண்ணீரே இல்லைன்னா நாங்கெல்லாம் செத்துப் போயிடுவோம்” ன்னு சொல்லிட்டு அழுதது.

kulam story
படம்: அப்புசிவா

“இங்க பக்கத்துல எப்போதும் வற்றிப் போகாத கிணறு இருக்கு. அங்க உங்களை நான் கொண்டு போயி விடுறேன்”

“நிஜமாதான் சொல்றியான்னு கேட்டுச்சு” மீனுக்குட்டி.

“ஆமாம். எங்க வீட்டில் ஒரு பெரிய குடம் இருக்கு. அதில் நீங்க எல்லோரும் ஏறிக்கோங்க. நான் என்னோட நண்பன் மதி கூட சேர்ந்து உங்களைக் கிணற்றில் விட்டு விடறேன்” அப்படின்னு சொன்னான் கபிலன்.

சொன்னது போலவே குடத்தில் மீன்களை போட்டு கிணற்றில் விட்டான். நிறையத் தண்ணீர் பார்த்தவுடன் மீனுக்கெல்லாம் ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. எல்லோரும் சேர்ந்து கபிலனுக்கும், அவன் நண்பன் மதிக்கும் நன்றி சொன்னாங்க.

கபிலனுக்கும் ரொம்ப மகிழ்ச்சியா இருந்துச்சு.

What’s your Reaction?
+1
2
+1
7
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments