ஹாய் குட்டீஸ்…

ஒரு பொதுவான விஷயம் பேசலாமா?

            பொதுவா நம்மவங்களை வரையத்தெரிஞ்சவங்க, வரைய தெரியாதவங்கனு ரெண்டா பிரிக்கலாம். சரியா நான் சொல்றது? இதில் நீங்க எந்த வகை?

            ஆனால் நல்லா கவனிங்க. குழந்தையில் நாம் எல்லோருமே நல்லா வரையறவங்கதான். அந்த ஆர்வத்தை  விடாமல் தொடர்ந்து வரையறவங்களுக்கு இன்னும் நல்லா வரும். அவ்ளோதான் விஷயம். அப்படின்னா எல்லோருமே வரையலாம்தானே.

            இதில் சின்ன பிள்ளைகள் வரையறது ஒரு வகை. அவர்களுக்கு பயம் இருக்காது. தான் சரியா வரையறோமா, இல்லை எதும் லாஜிக்கல் மிஸ்டேக் இருக்கா இப்படி எதுவுமே அவங்க கவலைப்படமாட்டாங்க. தான் நினைப்பதை அப்படியே வரைவாங்க. இதுதான் உண்மையான ஓவியம்.

kirukkar 5 1

            குழந்தைகளை வரையச்சொல்லிப் பாருங்களேன். அதில் மனிதனுக்கு இறகு முளைக்கும். சிங்கம் டிரஸ் போட்டுக்கிட்டு பேசும். மரம் நடந்துபோகும். இன்னமும் மனிதர்களுக்கு அவர்களே ஒரு உருவம் கொடுப்பாங்க. நாம் நேரில் பார்ப்பது போல இல்லாமல் அது ஒருமாதிரி இருக்கும். ஆனால் நல்லா புரியும். இன்னமும் அவர்கள் வரைவதில் இருக்கும் கற்பனை உலகம் நம்மையெல்லாம் ஆச்சரியத்திலும், மகிழ்ச்சியிலும் ஆழ்த்தும்.

kirukkar 5 2

            இந்த திறமை இயல்பாகவே நம் ஜீனில் இருக்கு. ஆதிகாலம் முதல் நாம் பழகிய கலை வடிவம் ஓவியம் இல்லையா. இவர்கள் தொடர்ந்து வரையும் போது பெரியவர் ஆக ஆக மனிதன், விலங்குகள் இப்படி அதன் முழு உருவத்தையும் சரியான அளவுகளில் வரைய கத்துக்குவாங்க. இதோடு, இதையே தொழிலாக எடுத்துச் செய்யும்போது இதே கற்பனை, இன்னமும் அழகா அவர்களுக்கு வரும். நன்றாக வரைபவர்களுக்கு ஆயிரக்கணக்கான வாய்ப்புகள் இப்போது உலகில் இருக்கு.

kirukkar 5 3

ரைட்டு…. அடுத்து

            இதை தொடர்ந்து செய்யாத, வரைவதில் ஆர்வம் காட்டாத ஒரு பெரிய அண்ணாவையோ அக்காவையோ இப்போது வரையச்சொல்லிப் பாருங்களேன். இப்போவும் அவர்கள் வரைவாங்க. அதே குழந்தைத்தனத்துடன் மனிதர்களை, விலங்குகளை கிறுக்காமுருக்காவா வரைஞ்சிருப்பாங்க. முக்கியமான வித்தியாசம், குழந்தையில் அவர்களிடம் இருந்த கற்பனை இப்போது இருக்காது. மனிதனை வரையச்சொன்னால் ஒரு மனிதன், சிங்கம்னா ஒரு சிங்கம். அவ்ளோதான் முடியும்.

அப்போ அந்த கற்பனை என்னா ஆச்சு?

காணாப்போச்சு….

            அதனால் சும்மா இருக்கும்போது, போரடிச்சுதுன்னா எதாவது வரைஞ்சுகிட்டே இருங்க. அதோடு எதாவது புக்ஸ் எடுத்து படிக்கவும் ஆரம்பிங்க. அதில் வரும் கதைகளுக்கு நீங்களே வரைஞ்சு பாருங்க. இன்னமும் நீங்களே ஒரு கதையை எழுதி அதுக்கும் வரைஞ்சு பாருங்க. இதெல்லாம் உங்களுக்கு மனம் ரிலாக்ஸா இருக்க, எதையும் சாதிக்க ஒரு தூண்டுகோலாக இருக்கும் . நிஜம்தான் . ட்ரை பண்ணிப் பாருங்க குட்டீஸ்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments