சின்னஞ்சிறு பிள்ளையே நீயும்
செல்போனை பார்த்த படி மூழ்கி கிடப்பதும் பாவமுன்னு புரிஞ்சிக்கோ!
ரீல்ஸ் ஷார்ட் வீடியோக்கள் அத்தனையும் நேரத்தை கொள்ளை கொள்ளும் தெரிஞ்சுக்கோ!
நம் அறிவை கெடுப்பதுடன் கூட உடல் ஆரோக்கியத்தை மென்று தின்னும் தெளிஞ்சுக்கோ!
நம்முடைய வேலைகளை நாமே செய்து பழகிக் கொள்வது தான் சிறப்புன்னு பழகிக்கோ!
மரத்தில் குதித்து விளையாடும் அணில் கூட்டத்தை பார்த்து கொஞ்சம் மகிழ்ந்துக்கோ!
பறவைக் கூட்டங்களை பாரு! அது எவ்வளவு சுறுசுறுப்பு விளங்கிக்கோ!
புத்தகங்கள் வாசிக்க பழகிக்கோ! அது எவ்வளவு சிறப்புன்னு அறிந்துக்கோ!
ஓடி விளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா
பாரதி பாட்டை கேட்டு இதை நீ பழகிக்கொள்ளனும்… பழகிக்கோ
What’s your Reaction?
+1
5
+1
6
+1
+1
+1
+1