
பென்சிலைத் தீட்டி எழுதலாம்
புத்தியைத் தீட்டி எழுதலாம்
கதையும் கவிதையும் எழுதலாம்
மனதில் உள்ளதை எழுதலாம்
வேண்டியது கேட்டு எழுதலாம்
வேண்டாததைத் தவிர்க்க எழுதலாம்
நட்புக்கு வாழ்த்தைப் பகிரலாம்
உறவுக்கு பாலம் அமைக்கலாம்
அறிவியல் அறிய எழுதலாம்
அறிவை வளர்க்க எழுதலாம்
ஆய்வுக்கட்டுரை எழுதலாம்
ஆகாயத்தில் பறக்கலாம்