ஹாய் சுட்டீஸ்!

எல்லாரும் எப்டியிருக்கீங்க? இன்னிக்கு நாம ஒரு ஈசியான புக் மார்க் செய்ய கத்துக்கலாமா?

தேவையான பொருட்கள்:

  • கெட்டியான அட்டை – 1
  • பென்சில் – 1
  • கத்தரிக்கோல் – 1

செய்முறை:

  • முதல்ல பூ, பட்டாம்பூச்சி மாதிரி உங்களுக்கு பிடித்தமான ஈசியான படம் ஒன்றை செலக்ட் செய்துக்கோங்க.
  • நீங்க செலக்ட் செய்த படத்தை ஒரு அட்டையில் பத்து ரூபாய் நாணயம் அளவுள்ள வட்டத்துக்குள்ள வரைஞ்சு  வெச்சுக்கோங்க.
  • ஒரு அட்டையில 16 செ. மீ. அளவு நீளத்துக்கு 2 செ. மீ. இடைவெளி விட்டு பக்கத்தில பக்கத்தில  இரண்டு இணை கோடுகள் (Parallel lines) போடுங்க.
Bookmark1
  • அந்த கோடுகளின் முடிவுல பத்து ரூபாய் நாணயம் அளவுள்ள வட்டத்தை ஒரு பாதி, கோடுகளின் ஒரு பக்கத்திலயும் மறு பாதி,  கோடுகளின் மறு பக்கத்திலயும் வர மாதிரி வரைஞ்சிக்கோங்க.
  • இப்ப அந்த வட்டத்தையும் சேர்த்து அந்த கோடுகளை வெட்டிக்கோங்க.
Bookmark2
  • இப்ப நீங்க வெட்டிக்கிட்ட அட்டையில் இரண்டு முனையிலும் வட்டத்தின் ஒன்றை ஒன்று ஒத்துள்ள சரிபாதி உருவம் (Symmetrical) இருக்கும். அதை எதிர் எதிர் பக்கத்தில மடிச்சுக்கோங்க.  அந்த மடிப்பில் இரண்டு பாதியையும் இணைத்து பார்த்தா வட்டம் முழுமை அடையணும்.
Bookmark3
  • இப்ப அந்த இரண்டு சரி பாதி வட்டத்தையும் ஒண்ணா இணைக்கற  மாதிரி, ஏற்கனவே படம் வரைஞ்சி வெட்டி வெச்சிருக்கும் வட்டத்தை  சேர்த்து ஒட்டிடுங்க.
Bookmark4
Bookmark5
Bookmark6
oppo_2

புக் மார்க் தயார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments