Ottrai Andankakkai

Dr. S. அகிலாண்ட பாரதி

பாரதி பதிப்பகம், சென்னை-92 செல் +91 9383982930

ரூ 100/-.

ஒற்றை அண்டங்காக்காய் என்ற சிறுவர் கதைத் தொகுப்பில், 7 கதைகள் உள்ளன. நம் சமூகத்தில் அறிவியலுக்குப் புறம்பான பல்வேறு மூடநம்பிக்கைகள் புழங்குகின்றன. இந்நூலின் தலைப்பான ‘ஒற்றை அண்டங்காக்காய்’ என்ற முதல் கதை, ‘ஒற்றை அண்டங் காக்காயைப் பார்த்தால், கெடுதல் நேரும்’, ‘பூனை குறுக்கே போகக் கூடாது’, ‘சுடுகாட்டுக்குப் போகும் போது, கையில் எலுமிச்சம்பழம் இருந்தால், பேய், பிசாசு அண்டாது’ போன்று, நம் சமூகத்தில் புழங்கும், மூடநம்பிக்கைகளை நம்பக் கூடாது என்ற கருத்தை விளக்குகிறது. இதன் மூலம் எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும், அப்பொருளின் அறிவியல் உண்மையை ஆராய்ந்து அறிய வேண்டியதன் அவசியத்தை, இக்கதையை வாசிக்கும் சிறுவர்க்கு வலியுறுத்துகிறது.  

‘புளிக்குழம்பு சாப்பிட்ட புலி’ என்ற கதையில், ஒரு நாள் புளிக்குழம்பு சாதத்தை ருசி பார்த்த ஒரு புலிக்குட்டி, தொடர்ந்து தின்கிறது. இது வித்தியாசமான கற்பனையில், எழுதப்பட்ட ஜாலியான கதை. 

‘என் பூ எங்கே?’ என்ற கதையில், பூக்களின் மகரந்தச் சேர்க்கை குறித்தும், ‘மன்னிக்கலாமா?’ என்ற கதையில், உணவுச்சங்கிலி குறித்தும், சிறுவர்கள் தெரிந்து கொள்வார்கள். சூடான் நாட்டு ஹசனும், ரஷ்ய நாட்டு மார்ட்டினும், தங்கள் அனுபவத்தில் என்ன தெரிந்து கொண்டனர் என்பதை இரு மொழிபெயர்ப்புக் கதைகள் சொல்கின்றன. அழகிய ஓவியங்கள் கொண்ட இச்சிறுவர் கதைப் புத்தகத்தை வாங்கி, உங்கள் குழந்தைகளுக்கு வாசிக்கக் கொடுங்கள்.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *