ஒரு காட்டில் எல்லா பறவைகளும் நான் தான் பெரிய பறவை என்று பெரும் சண்டை நடந்தது. அப்பொழுது அங்கிருந்த ஒரு மரம் சொன்னது,
“இப்ப எதுக்கு சண்டை போடறீங்க? இப்ப என்ன? உங்களுக்குள்ள யார் பெரியவர்ன்னு தெரியணும்! அவ்வளவு தானே? வேண்டுமென்றால் ஒரு பாட்டுப்போட்டி வைக்கலாம். அதில் யார் உயர்ந்தவர் என்று தீர்மானிக்கலாம்!” என்றது மரம்.
எல்லா பறவைகளும் ஒத்துக்கொண்டன.
ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில் பாட்டுப் போட்டி ஆரம்பமானது.

போட்டியில் முதலாவதாக மயில் வந்தது. அதனால் மூன்று நிமிடங்களுக்கு மேல் மூச்சுவிடாமல் பாட முடியவில்லை. ஆகையால் அது போட்டியிலிருந்து விலக்கப்பட்டது.
பின் குயில் குக்கூ குக்கூ என ஏழு நிமிடங்கள் பாடியது.
அதற்கு பிறகு காகம் வந்தது. அது கா.. கா.. கா.. என ஐந்து நிமிடங்கள் பாடியது.
பிறகு குருவி வந்தது. அது ஆறு நிமிடங்கள் பாடியது. பின் கழுகு வந்தது. அது ஒன்பது நிமிடங்கள் பாடியது.
அதற்கு பிறகு கிளி வந்தது. அது கீகீகீ என்று எட்டு நிமிடங்கள் பாடியது.
இப்படி அங்குள்ள எல்லா பறவைகளும் வந்து பாடின.
அங்கிருந்த எந்தப் பறவையாலும் பத்து நிமிடங்களுக்கு மேல் பாட முடியவில்லை.
ஆகையால் மரம் சொன்னது யாரும் உயர்ந்தவர்களும் இல்லை. யாரும் தாழ்ந்தவர்களும் இல்லை. அனைவரும் சமம் என்று தீர்ப்பு வழங்கியது.
♥♥♥♥♥