
பட்டங்களைப் பறக்க விடக்
குட்டிப் பையா ஓடிவா!
அக்கா, அண்ணா கைபிடித்து
அவர்களையும் கூட்டிவா!
வண்ண வண்ணப் பட்டங்கள்
வானத்திலே பறக்கின்றன!
போட்டி போட்டு உயரத்தில்
துள்ளித் திரியும் பட்டங்களாம்!
சிறார்களும் பெரியோரும்
சேர்ந்து இங்கே பார்க்கிறாரே!
காற்றடிக்கும் திசையிலே
உயர உயரப் பறக்குதே!
உல்லாசமாய்ச் சிறுவர்களும்
அண்ணாந்து பார்க்கின்றாரே!
உள்ளங்களில் கொள்ளை கொள்ளும்
உண்மையான விளையாட்டு!
பட்டங்களைப் பறக்கவிட்டு
நாளை நாமும் வெல்வோமே!
பட்டங்களும் சட்டங்களும்
நாளை உங்கள் கைகளில்!
புவனா சந்திரசேகரன்