ஒரு பொண்ணு கடைக்கு உக்காந்து உக்காந்து போனாளாம்! ஏன்???
ஏன்னா அவங்க அம்மா வழியில் நிக்காம போக சொன்னாங்களாம் 🤣🤣
_____
ஒரு பையன் கல்யாணத்துக்கு ப்ரெட் கொண்டு போனானாம் ஏன்???
ஏன்னா கல்யாணம் ஜாம் ஜாம்னு நடந்துதாம்
_____
என்னங்க காலைல வேகவேகமா நடந்து போறீங்க?
பஸ் ஸ்டாண்டு வரை வாக்கிங் போறேன்.
நான் அங்கதான் போறேன். வண்டியில் உட்காருங்க. ட்ராப் பண்ணிடுறேன்.
_____
மழை வருதே கையில குடை வச்சிருக்கீங்க.. ஏன் குடை பிடிக்காமல் நடந்து போறீங்க..
குடையை பிடிச்சா குடை ஈரம் ஆகிடும்..அதனால் தான்..
😃😃
_____
ஏன் அவர் புத்தகத்தில் விரல் வச்சு வச்சு தள்ள ட்ரை பண்றார்?
செல்போன் பழக்கம் விடமுடியலயாம்
_____
நான் விரதமிருக்கேங்க
எத்தனை வேளை சாப்பிடாம விரதம் இருப்பீங்க?
நான் வெஜ் மட்டும் சாப்பிடாத விரதங்க
_____
நோயாளி : டாக்டர் ஒரு ஊசி, போட்டு என்னை கொன்னுருங்க
டாக்டர்: ஒரு ஊசி போட்டு கொல்ல முடியாதுங்க
_____
கிஸ்மிஸ் பழம் ன்னு ஏன் பேர் வச்சாங்க தெரியுமா?
மிஸஸ்ஸ கிஸ் பண்ணா கொலை கேஸ் ஆகிரும்ல
_____
ஏன் காதலர்கள் ஓடிப்போறாங்க?
நடந்து போனா பிடிச்சிருவாங்கள்ள. அதான் ஓடிப்போறாங்க
_____
போலீசார்: நீங்க தானே ஓடிப்போனவங்க
காதலர்கள் – சார்! ஓடிப்போகலை… கார்ல தான் போனோம் சார்
_____
தங்க வீடு வேணும்
இல்லைங்க… கான்க்ரீட் வீடு தாங்க இருக்குது
_____
இப்போ டைனோசர் இருந்தா எப்படி இருக்கும்?
நம்ம எலும்புகளை வைச்சு ஆராய்ச்சி பண்ணும் டைனோசர்
_____
பூஞ்சிட்டு குழுவினர்