வணக்கம் பூஞ்சிட்டூஸ்,
“ஸ்கூல் திறந்தாச்சு. எல்லாரும் புது வகுப்புக்குப் போயிருப்பீங்க! அதுல நிறைய பேர் எப்படா நம்ம பேனா வெச்சு எழுதப் போறோம்னு காத்துக்கிட்டு இருப்பீங்க! பென்சில் சீவி சீவி கை வலிக்கும், அதோட பேனா வெச்சு எழுதுனா நம்ம எல்லாம் பெரிய பிள்ளை ஆயிட்டோம்னு ஒரு ஃபீலிங் வரும் அப்படித்தானே!”
உங்களுக்கு எல்லாம் ஒரு விஷயம் தெரியுமா? பென்சில் கண்டுபிடிக்கிறதுக்கு ரொம்ப வருஷங்கள் முன்னாடியே பேனாவைக் கண்டுபிடிச்சுட்டாங்க! எங்க? எப்படி? யார்? இப்படி எல்லாம் தெரிஞ்சுக்கலாம் வாங்க.
இந்த மாதம் நாம் தெரிந்து கொள்ளப் போவது நம் மனதைக் கவர்ந்த பேனாவைப் பற்றி.

கி.மு. 3200ஆம் ஆண்டு முதல் தாவரங்களால் ஆன பேனா நடைமுறையில் இருந்தது. மூங்கில் போன்ற தாவரங்களின் குச்சியை லாவகமாக செதுக்கி அதன் ஒரு முனையை பேனாவின் ‘நிப்’ போலவும், மறுமுனையை சாய்வாக வெட்டி அதனுள்ளே மையை ஊற்றவும் ஏதுவாக செதுக்கி இருந்தனர்.
அதன் பிறகு கி.பி. 600ஆம் வருடத்தில் இருந்து பறவை இறகுகளை எடுத்து அதை மையில் தோய்த்து மரப்பட்டைகளில் எழுதும் வழக்கம் இருந்தது. வாத்தின் இறகு மிகக் குறைந்த விலையிலும், அன்னப்பறவையின் இறகு விலை அதிகமாகவும் விற்கப்பட்டன.
நாம் அனைவரும் இப்போது பார்க்கின்ற ‘இங்க் பேனா’வின் முன்னோடியான ‘ஃபவுண்ட்டைன் பேனா’வைக் கண்டுபிடித்தவர் லிவிஸ் வாட்டர்மேன் ஆவர். தந்துகி இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரித்த இந்த பேனா, சீராக இங்க்கை வெளியிட்டு காகிதத்தை பாழாக்காமல் இருக்க தயாரிக்கப்பட்டது.
அதன் பிறகு லஸ்லோ ப்ரையோ என்பவர் பால் பாயிண்ட் பேனாவைக் கண்டுபிடித்தார். இங்க பேனாவில் இங்க் ஊற்றும் வேலை மற்றும் இங்க் காகிதத்தில் சிந்தி ஒரு வேலைக்கு இரு வேலை ஆவதால் பால் பாயிண்ட் பேனாவைக் கண்டுபிடித்தார்.
ஒரு சிறு குழாயில் இங்க்கை செலுத்தி அதன் ஒரு முனையை அடைத்து, மறுமுனையில் சிறிய உலோக பந்தை அடைத்துவிடுவர். காகிதத்தில் வைத்து எழுதும் போது பேனா உருண்டு உருண்டு அதில் ஏற்படும் சிறு இடைவெளி வழியே இங்க் காகிதத்தைத் தொடும். அந்த குழாயின் பெயர் தான் ‘ரீஃபில்’. அதை விதவிதமான மூடியிட்ட பிள்ஸ்டிக் குழாய்குள் திணித்து பால் பாயிண்ட் பேனா ஆக்கினர்.
விண்வெளியில் புவி ஈர்ப்பு விசை அறவே இருக்காது அதனால் அங்கே உபயோகப்படுத்தவும் ‘ஃபிஷர் ஸ்பேஸ் பேனா’ கண்டுபிடிக்கப்பட்டது.
ஆங்கிலத்தில் பேனா என்பதற்கு pen என்று பெயர். PEN என்பதற்கு அர்த்தம் தெரியுமா குட்டீஸ்? Poets, Essayists and Novelists என்று பொருள்.
நீங்க ஆசைப்பட்டு வாங்குற விதவிதமான பேனாவிற்குள் எத்தனை ரகசியம் ஒளிந்திருக்கிறது என்று தெரிந்து கொண்டீர்களா பூஞ்சிட்டுக்களே!
உங்களுக்கான கேள்வி.
உலகிலேயே மிக விலை உயர்ந்த பேனா எது?
– பூர்ணிமா கார்த்திக் ‘பூகா’