விக்கியும் கரணும் யாஷிகாவும் மறுநாள் தங்களுடைய வகுப்பாசிரியையிடம் தங்களுடைய நோட்டுப்புத்தகங்கள் காணாமல் போவதைப் பற்றி புகாரளிக்கச் சென்றார்கள்.

“மிஸ்! நேத்திக்கு என்னோட மேத்ஸ் ஹோம் வொர்க் நோட் காணாமப் போன மாதிரியே, பத்மினி ரோஷினி ரெண்டு பேரோட ஹோம் வொர்க் நோட்டும் காணாமப் போச்சு மிஸ்!” என்று கூறினான் விக்கி.

“அது மட்டுமில்ல மிஸ்! போன வாரம் நம்ம க்ளாஸ்ல நாலு பேரோட ரெக்கார்ட் நோட் காணாம போச்சு மிஸ்!” என்றாள் யாஷிகா.

“என்ன! ஹோம் வொர்க் நோட் மாதிரி ரெக்கார்ட் நோட்டும் காணாம போச்சா? எப்டி?” என்று அதிர்ந்து போய் கேட்டார் வகுப்பாசிரியை வசந்தி.

அதற்குள் பத்மினி ஓடி வந்து,

“மிஸ்! மிஸ்! இன்னிக்கு ஜீவனோட இங்க்லீஷ் காம்போசிஷன் நோட் காணமாம்! அவன் அழுதுட்டிருக்கான் மிஸ்!” என்று பதட்டத்துடன் கூறினாள்.

வசந்தி அந்த அழுது கொண்டிருக்கும் மாணவனிடம் ஓடினார்.

“அழாதே ஜீவன். நா இத பிரின்சிபால் கிட்ட சொல்றேன். சீக்கிரமே காணாம போன உங்க எல்லாருடைய நோட்டும் கிடைக்கும். கவலைப்படாதே!” என்று அவனை சமாதானம் செய்துவிட்டு பள்ளித் தலைமை ஆசிரியையின் அறை நோக்கிச் சென்றார்.

lostbook
படம்: அப்புசிவா

அங்கே போனால் இதே போன்ற நோட்டு காணாமல் போன புகாருடன் இன்னும் நான்கைந்து ஆசிரியைகள் வந்திருந்தனர்.

எல்லாருடைய புகார்களையும் கவனமாகக் கேட்டுக் கொண்ட தலைமை ஆசிரியை ஜெயலக்ஷ்மி, அடுத்து என்ன செய்வது என்று அனைத்து ஆசிரியர் ஆசிரியைகளையும் அழைத்து பேசினார்.

அதன் பிறகு எல்லா மாணவ மாணவிகளையும் அழைத்து தங்கள் உடைமைகளை பத்திரமாகப் பார்த்துக் கொள்ள, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாணவன்/ மாணவி என்று வகுப்புக்கு ஒருவர் காவலாக இருக்க வேண்டும் என்று கட்டளையிட்டார்.

அதன்படி ஒவ்வொரு நாளும் வகுப்புக்கு ஒருவர் என காவலிருக்கத் தொடங்கினார்கள்.

இந்த காவல் இருக்கும் முறை வழக்கத்துக்கு வந்த ஒரு வாரம் வரை யாருடைய நோட்டும் காணாமல் போகாமல் இருந்தது.

ஆனால் காவலாக இருக்கும் அந்த ஒருவர் பாடத்தை கவனிக்கவோ, கரும்பலகையில் எழுதிப் போடப்படும் குறிப்புகளை எழுதிக் கொள்ளவோ முடியாமல் போனது.

முக்கியமாக ஆய்வகம், நூலகம் போன்று வகுப்பறையைவிட்டு வெளியே சென்று கலந்து கொள்ள வேண்டிய பாட வேளைகள் தவறிப் போனதால் அவர்களின் படிப்புக்கு பெரிய பின்னடைவு ஏற்படத் தொடங்கியது.

“இப்ப என்ன செய்யறது வசந்தி? பசங்கள லேபுக்கு கூட்டிட்டு போய்தான் ஆகணும்! அந்த நேரத்தில க்ளாஸ் ரூம்ல இந்த குறிப்பிட்ட ஸ்டூடன்ட் மட்டும் உக்கார்ந்திருந்தா சரியா வராதுல்ல..

ஏற்கனவே இது சம்மந்தமா பேரண்ட்ஸ் கிட்டேர்ந்து கம்ப்ளெய்ன்ட்ஸ் வர ஆரம்பிச்சிடுச்சி..

நாம இந்த பிரச்சனைக்கு வேற தீர்வு தான் கண்டு பிடிக்கணும்!” என்றார் தலைமை ஆசிரியை ஜெயலக்ஷ்மி.

“மேம்! நாம வேணும்னா க்ளாஸ் ரூம்ல கண்காணிக்கறதுக்கு ஸ்டூடன்ட்ஸ்க்கு பதிலா செக்யூரிட்டீஸ் அப்பாய்ன்ட் பண்ணலாமா?” என்று கேட்டார் பி.டி. மாஸ்டர்.

“அது ரொம்ப எக்ஸ்பென்சிவ்! அது மட்டுமில்ல; அது நாம முடிவு பண்ண முடியாது. மேனேஜ்மென்ட்தான் முடிவு செய்யணும்! நாம இத நம்ம வரையில எப்டி சால்வ் பண்றதுன்னு யோசிப்போம்!” என்று கூறினார் ஜெயலக்ஷ்மி.

“இப்போதைக்கு பசங்களுக்கு அசெம்ப்ளி வெக்காம அவங்கவங்க க்ளாஸ் ரூம்லயே ப்ரேயர் செய்யட்டும்னு அனௌன்ஸ் செய்லாம்; அப்றம் எல்லா ஸ்டூடன்ட்ஸையும் அவங்கவங்க பேகை பூட்டு வெச்சி பூட்டிக்க சொல்லலாம். லேபுக்கோ லைப்ரரிக்கோ போகறப்ப அவங்கவங்க பேகையும் எடுத்துக்கிட்டு போகச் சொல்லலாம்;” என்றார் வசந்தி.

“ம்.. இப்போதைக்கு இப்டியே செய்லாம்.. ஆனா இதையே தொடர்ந்து செய்ய முடியாது.. இதுக்கு நாம சீக்கிரமே ஒரு தீர்வைக் கண்டு பிடிச்சாகணும்!” என்று கூறிக் கொண்டே ஜெயலக்ஷ்மி எழுந்து சென்றார்.

அவர்கள் அந்த நோட்டுத் திருடனைக் கண்டுபிடிக்க என்ன செய்தார்கள்.

அடுத்த இதழில் பார்க்கலாம்.

அதுவரைக்கும் சமத்தா இருக்கணும் குட்டீஸ் சரியா?!

பை! பை! டாட்டா!

👋👋👋👋👋👋👋👋

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments