மைனா மைனா பூப்போடு
மஞ்சள் கொன்றைப் பூப்போடு
மடையான் மடையான் பூப்போடு
மணக்கும் மகிழம் பூப்போடு
சிட்டே சிட்டே பூப்போடு
செம் பருத்திப் பூப்போடு
கொக்கே கொக்கே பூப்போடு
வெள்ளைத் தாமரை பூப்போடு
மயிலே மயிலே பூப்போடு
நீலக் குறிஞ்சிப் பூப்போடு
சோலைக் குயிலே பூப்போடு
சூரிய காந்திப் பூப்போடு
பச்சைக்கிளியே பூப்போடு
பவள மல்லிப் பூப்போடு
பருந்தே பருந்தே பூப்போடு
பாரி ஜாதப் பூப்போடு
சோளக்குருவி பூப்போடு
செண்டு மல்லிப் பூப்போடு
மாடப் புறாவே பூப்போடு
வாடா மல்லிப் பூப்போடு
அண்டங் காக்கா பூப்போடு
அந்தி மந்தாரைப் பூப்போடு
கொண்டைக் குருவி பூப்போடு
நந்தியா வட்டைப் பூப்போடு
What’s your Reaction?
+1
+1
3
+1
+1
+1
+1