நீர்க்குமிழி சோப் – சிறுவர் கதைகள்
ஆசிரியர்: ராஜலட்சுமி நாராயணசாமி
பாரதி பதிப்பகம், சென்னை-92. செல்: 9383982930
விலை ரூ 80/-.

‘தருணின் பொம்மை’ என்பது முதல் கதை. பொம்மைகளுடன் விளையாடாமல் எந்நேரமும் தொலைக்காட்சி பார்க்கும் தருணுக்கு, டிவியும் பொம்மைகளும் சேர்ந்து, விளையாட்டில் எப்படி ஆர்வம் ஏற்படுத்தின என்பதைச் சொல்கிறது.
‘டாலி-கோலி-அதிர்ச்சியில் காலி’ என்ற கதை டாலி, கோலி என்ற ஆமை, முதலை கதையைச் சொல்கிறது. தான் இருந்த குட்டையைக் கடல் என்று நம்புகிறது டாலி. தான் இருந்த கடலைக் குட்டை என நம்புகிறது முதலை. முடிவில் இரண்டுக்கும் ஏற்படும் அதிர்ச்சி தான் கதை.
எறும்புண்ணிகளிடமிருந்து எறும்புகளைக் கவின், தருண் என்ற சுட்டி எறும்புகள், எப்படிப் புத்திசாலித்தனமாகக் காப்பாற்றின என்பதைச் சொல்லும் கதை, ‘எறும்புனா வைரஸ்’.
‘சோப் நுரைக்குள் மாட்டிக் கொண்ட குட்டியானை எப்படி வெளியே வந்தது என்பதைச் சொல்லும் கதை ‘நீர்க்குமிழி சோப்’. கேரட் பீட்ரூட் தோட்டம் வைத்திருந்த இரண்டு முயல் நண்பர்களின் சுவாரசியமான கற்பனை நிறைந்த கதை பீட்-கேட். குழந்தைகளுக்குப் பிடித்த வானவில் கதைகளும், இதில் உண்டு. 6-9 வயதினர்க்கான சுவாரசியமான கதைகள்.