குழந்தைகளே, இன்னைக்கு ஜிகினா பக்கத்தில், பழுத்த இலைகளை வைத்து அழகிய பூக்கள் செய்யலாமா?

இலையுதிர் காலத்தில், சில மரங்களின் இலைகள், மஞ்சள், சிவப்பு, ஆரஞ்சு வண்ணமாக மாறும். பிறகு, சில நாட்களில் உதிர்ந்து விடும். அந்த மாதிரி, வண்ணமயமான பழுத்த இலைகளை பயன்படுத்தி தான், இன்னைக்கு நாம கைவினை செய்யப் போறோம்.
தேவையான பொருட்கள் :
காய்ந்த / பழுத்த இலைகள்
மெலிதான குச்சிகள்
புளிய விதை
பல வண்ணங்களில் இருக்கும் பழுத்த இலைகளை ஒரு சற்றே தடிமனான அட்டையில், அழகிய மலர்கள் போன்று ஒட்டி வைக்கவும்.
பூவுக்கு நடுவில் இருக்கும் மகரந்த பகுதிக்கு, தட்டையாக இருக்கும் விதை ஏதேனும் பயன்படுத்திக் கொள்ளலாம். எ.கா. புளிய விதை.
பூவின் காம்பிற்கு, மெலிதான குச்சி பயன்படுத்திக் கொள்ளவும். எ. கா. வேப்பிலை ஈர்க்கு.
இப்போது, பழுத்த இலைகளை கொண்டு செய்த அழகிய மலர் தயார்.