குழந்தைகளே, இன்னைக்கு ஜிகினா பக்கத்தில், தீக்குச்சிகள் கொண்டு, அழகிய உருவங்கள் செய்யலாமா?
தேவையான பொருட்கள்:
- தீக்குச்சிகள்
- ஒட்டும் பசை
செய்முறை
தீக்குச்சிகளை அடுக்கி வைத்து, விரும்பும் உருவங்களை செய்து மகிழலாம்.. இதை மேலும் அலங்கரிக்க, வண்ணக் களிமண் பயன்படுத்தலாம். கீழே எடுத்துக்காட்டுக்கு தீக்குச்சிகள் கொண்டு செய்த சில உருவங்கள் கொடுத்து உள்ளேன்.



பட்டாம்பூச்சி, மீன், நத்தை ஆகியவை கொடுத்து உள்ளேன். உங்கள் கற்பனை சிறகை விரியுங்கள். கற்பனை உருவத்திற்கு, தீக்குச்சிகள் கொண்டு உருக்கொடுத்து மகிழுங்கள்.
தமிழ் முகில்