
பாப்பா ஒரு சொல் கேட்பாயா!
தாய்மொழியாம் தமிழை நீயும்
போற்றி தினமும் கொண்டாடு!
ஞாயிற்றுக்கிழமை நாலடியார் திங்கட்கிழமை திருக்குறளும்
கையில் ஏந்திக் கற்றிடுவாய்!
செவ்வாய்க்கிழமை செய்யுளும்
புதன்கிழமை புதுக்கதையும்
வாசித்து நீயும் மகிழ்வாயா!
வியாழக்கிழமை விடுகதையும்
வெள்ளிக்கிழமை வெண்பாவும் விளையாட்டுடன் நீ கற்பாயா!
சனிக்கிழமை சங்கப் பாடல்
தினமும் கொஞ்சம் நீதி நூலென்று
அனைத்தும் கற்று அறிவை வளர்!
இயல், இசை, நாடகமென்று அன்றே
முத்தமிழை வளர்த்து மகிழ்ந்த
முன்னோர் செயலைப் போற்றிடுவோம்!
