பிண்டு, “ஹாய் பூஞ்சிட்டுக்களே நான் உங்க பிண்டு வந்திருக்கேன்!”

“ஹலோ செல்லகுட்டீஸ்! நான் உங்க அனு வந்திருக்கேன்”

பிண்டு, “அனு குட்டி உனக்கு எந்த காய்கறி ரொம்ப பிடிக்கும் சொல்லு பார்க்கலாம்?”

அனு, “எனக்கு பொட்டேட்டோ தான் ரொம்ப பிடிக்கும் பிண்டு”

பிண்டு, “சூப்பர் எனக்கும் உருளைக்கிழங்கு தான் ரொம்ப பிடிக்கும். இன்னிக்கு நம்ம அதை வெச்சு ஒரு வித்தியாசமான சோதனையை செய்யப்போறோம்”.

“என்ன பிண்டு அது! அதற்கு தேவையான பொருட்கள் எல்லாம் சொல்றியா? நான் எடுத்து வைக்கிறேன்”

அந்த சோதனையோடு பேரு ‘ஸ்டார்ச்சோடு ஒரு மார்ச்’

 தேவையான பொருட்கள்:

அயோடின் சொல்யூஷன் – சிறிய பாட்டில்

இங்க் ஃபில்லர் – ஒன்று

உருளைக்கிழங்கு – ஒன்று

தக்காளி – ஒன்று

உப்பு – சிறிதளவு

பாலாடைக்கட்டி – இரண்டு அல்லது மூன்று சிறிய கட்டிகள்

ஆப்பிள் – இரண்டு துண்டு

செய்முறை:

  1. அனு பாப்பா! முதலில் பெரியவங்க உதவியோட உருளைக்கிழங்கைக் குறுக்கு வாட்டிலும், தக்காளியையும் ஆப்பிளையும் சிறுசிறு துண்டுகளாகவும் வெட்டிக் கொள்ள வேண்டும்.
  1. அனைத்தையும் தனித்தனி தட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
  1. அடுத்தது இங்க் ஃபில்லரின் உதவியோடு அயோடின் சொல்யூஷனை எடுத்து, இரண்டு மூன்று துளிகள் வெட்டி வைத்த காய்கறிகள் மற்றும் பழத்தின் மீதும், உப்பின் மீதும் பாலாடைக்கட்டியின் மீது விட வேண்டும்.
  1. அயோடின் துளி சேர்த்த பிறகு பத்து நிமிடங்கள் காத்திருக்க வேண்டும். பத்து நிமிடத்திற்கு பிறகு, அந்த திரவத்தின் நிறம் என்னவென்று குறிப்பெடுத்துக் கொள்ள வேண்டும்.

அனு, “ஓகே பிண்டு! நீ சொன்ன மாதிரியே செஞ்சுட்டேன். பத்து நிமிஷம் வெயிட் பண்ணி பாக்கலாமா?”

பத்து நிமிடங்களுக்குப் பிறகு…

DSC03426
ஆப்பிள் மற்றும் உருளைக்கிழங்கு

அனு, “பிண்டு உருளைக்கிழங்கு மற்றும் ஆப்பிளில் போட்ட திரவம் மட்டும் கரு நீல நிறமாக இருக்கு. மற்ற எல்லா பொருட்களிலும் அதே சிவப்பு நிறத்தில் தான் இருக்கு. எப்படி அந்த கலர் மாறுச்சு? உருளைக் கிழங்கும், ஆப்பிளும் என்ன மந்திரம் போட்டுச்சு?”

“ஸ்டார்ச் அதாவது மாவுச்சத்து அதிகம் உள்ள பொருட்களில் அயோடினை சேர்க்கும் போது சிவப்பு நிறத்தில் உள்ள அயோடின் திரவம் நீல நிறத்திற்கு மாறும். அந்தப் பொருளின் உள்ள மாவு சத்தின் அளவைப் பொறுத்து, அதன் நிறம் இள நீல நிறம், அடர் நீல நிறம் கருப்பு நிறம் என்று மாறுபடும். இது தான் அந்த கலர் மாறின மேஜிக்” என்று விளக்கமாக சொன்னது பிண்டு.

அறிவியல் உண்மைகள்

ஸ்டார்ச்சில் அமிலோஸ் என்ற வேதிப்பொருள் உள்ளது. அந்த அமிலோஸ், அயோடினுடன் சேரும் பொழுது  ‘ட்ரை அயோடைடு அயானாக’ மாறும். அந்த மாற்றமே இந்த நீல நிறத்திற்கு காரணம்.

“இந்த சின்ன சோதனையை வைத்து பாலில் உள்ள கலப்படத்தைக் கண்டுபிடிக்கலாம் அனு!” என்று பிண்டு கூற அதை ஆச்சரியத்துடன் பார்த்தாள் அனு.

பிண்டு, “ஆமா அனு, பால் நல்லா திக்கா இருக்க, சோள மாவை கலப்படம் செய்வார்கள். அப்படி கலப்படம் செய்யப்பட்ட பாலில் ஒரு சொட்டு அயோடின் திரவத்தை கலந்து பார்த்தால் அதன் நிறத்தை வைத்து நாம் கண்டுபிடித்து விடலாம்”.

“ஓ அப்ப ப்ளூ கலரா மாறுச்சுன்னா, அந்த பால்ல கலப்படம் இருக்கன்னு அர்த்தமா பிண்டு?”.

“ஆமாம் அனு கரெக்ட். என்ன குழந்தைகளே நீங்களும் இந்த சின்ன சோதனையை உங்கள் வீட்டில் செய்து பார்க்கிறீர்களா?”

பிண்டு,”மாவு சத்து அதிகமுள்ள பொருட்கள் நமக்கு உடலுக்கு தேவையான எரிசக்தியை தருகிறது. குறிப்பாக குழந்தைகளும், விளையாட்டு வீரர்களும் தவறாமல் இந்த ஸ்டார்ச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். ஸ்டார்ச்சை எடுத்துக் கொண்டால் நன்றாக மார்ச் ஃபாஸ்ட்  செய்யலாம்”.

முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த மாதிரி சோதனை செய்யப்பட்ட உணவுப் பொருட்களை நாம் உண்ணக்கூடாது. மறக்காமல் அதை குப்பைத் தொட்டியில் வீசி விட வேண்டும். அதுபோல் அயோடின் திரவத்தையும் பார்த்து பெரியவர்களின் உதவியோடு கையாள வேண்டும்.

என்ன குட்டீஸ் இந்த சோதனை ஈசியா உங்களுக்கு புரியும்படி இருக்கா? அடுத்த மாசம் இன்னொரு இன்ட்ரஸ்டான எக்ஸ்பிரிமெண்ட்டோட நானும் அனுவும் வரோம் பாய்.

பாய் குட்டீஸ்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *