“பாட்டி எங்க இருக்கீங்க? நான் ஸ்கூல்லேர்ந்து வந்துட்டேன்”

“வா வினிதா கண்ணு, மத்யானம் சாப்டீங்களா? நல்லா பாடம்லா கவனிச்சீங்களா?”

 “ஆங் பாட்டி! சரி‌ எனக்குபீ பசிக்குது எதாவது சாப்ட பண்ணி தரீங்களா”.

    “ம்ம், அதுக்கென்ன என் தங்கத்துக்கு இல்லாததா? எங்க ராமுவ காணும்?

  “அவன் தாத்தா கூட போர் போட வயலுக்கு போயிட்டான். எனக்கு செஞ்சு குடுங்க பாட்டி”

 “அப்படியா சரி சரி, நீங்க போயி கை கால் கழுவிட்டு வாங்க. நான் உனக்கு பிடிச்ச மாதிரி செஞ்சு தரேன்.

  “ம்ம் சரி “

“பாட்டி நான் வந்துட்டேன், என்ன செஞ்சிட்டு இருக்கீங்க?”

 “பரங்கிக்காய் துருவரேன்டா வினிதா”.

“அதுல என்ன பாட்டி செய்ய போறீங்க”.

  “சொல்றேன், சொல்றேன். இந்தா இந்த துருவல அப்படி வை”

   “ம் வச்சுட்டேன், அப்றம்!!”

    “நான் கேட்க கேட்க ஒவ்வொரு பொருளா எடுத்து குடு. சரியா”

  “ம் சரி”

“மொதல்ல வாணலிய எடுத்து அடுப்புல வச்சிக்கனும் , அப்றமா  அதுல ரெண்டு ஸ்பூன் நெய்விட்டு முந்திரி திராட்சையப் பொறிச்சு எடுத்துக்கனும்.

    “எடுத்ததும் அதே வாணலில தோல்சீவி துருவுன பரங்கிக்காயப் போட்டு வதக்கனும். நல்லா வதங்குனதும் அதுல காய்ச்சி ஆறுன பால் அங்க இருக்கு பாருங்க, அத எடுத்துக் குடுங்க.

  “ம் அதான். அதையும் போட்டு நல்லா வெந்து சுண்டுனதும், இப்ப நாம பொடி பண்ணி வச்ச வெல்லத்தப் போட்டு நல்லா கலந்து விடனும்.

  “நெறய வெல்லம் போடுங்க பாட்டி”

   “இல்லடா செல்லம், ரெண்டு கப் துருவல்கு ஒரு கப் வெல்லம் தான் போடனும்.

     “ம்! இப்போ வெல்லம் நல்லா சேர்ந்துட்டு. அதுகூட ஏலக்காய் பொடி, பொறிச்சு வச்ச முந்திரி திராட்சைய சேர்த்து கிளறி இறக்குனா, ரொம்ப அருமையான பரங்கிக்காய் அல்வா ரெடி .

parangikai Halwa

   “ம் சூப்பர், ரொம்ப டேஸ்டா இருக்கு. ராமுக்கு எடுத்து வைக்கிறேன் . அவனுக்கும் ரொம்ப பிடிக்கும்”.

  “சரிடா கண்ணு, நான் போய் எடுத்து வைக்கிறேன். நீங்க சாப்டு போய் படிங்க சரியா.

“ம் சரி பாட்டி’.

டிப்ஸ் கார்னர் :

   பரங்கிக்காயை அதிகமா சாப்பாட்ல சேத்துக்கிட்டா கண் பார்வை நல்லா இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதுல வைட்டமின் ஏ, சி, இ இருக்கு.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
1 கருத்து
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments