நா காக்க

வணக்கம் பூஞ்சிட்டுகளே!

போன  மாசம் முழுக்க  ரிவிஷன்  எக்ஸ்சாம்ன்னு ஆன்லைன்  கிளாஸ  உத்து  உத்து  பார்த்து  நம்ம கண்ணும்… முதுகு  உடைய உக்காந்து நம்ம முதுகு , வலிக்க வலிக்க எழுதி  நம்ம கையும்  படாத  பாடு  பட்டிருக்குமே! ஆனா  இந்தா  நாக்கு  மட்டும்  ஜாலியா இருக்குல்ல..?! அத உருட்டி மிரட்டி பிரட்டி கொஞ்சம் கலாட்டா பண்ணுவோமா.. குட்டீஸ்..?!

நீங்க  செய்ய  வேண்டியதெல்லாம்.. கீழ  நாங்க  கொடுத்திருக்க சொற்களை  வேகமா  மனப்பாடம் பண்ணி, நாக்கு உளறாம பிறழாம  ( இந்த கண்டிஷன் ரொம்ப முக்கியம் யுவர் குட்டி ஹானர்!) உங்க  வீட்டுல அம்மா  அப்பா பாட்டி  தாத்தான்னு அத்தனை பேரையும் சொல்லச் சொல்லி அவங்க வாய்ல  வார்த்தை படற பாட்டைப் பார்த்து  ஜாலியா  நீங்க  ரசிக்கலாம்!

இந்த  சொற்களுக்கு தமிழ்ல  ‘நா நெகிழ் சொற்கள்’ன்னு பேர். ஆங்கிலத்துல டங் ட்விஸ்ட்டர்ஸ்ன்னு சொல்லுவோமே.. அதான் இது!

சரி  தயாரா?

  • இது  யாரு தச்ச சட்டை! எங்க  தாத்தா செஞ்ச சட்டை!
  • ஓடுற நரியில ஒரு நரி கிழநரி; கிழநரி முதுகுல ஒரு முடி நரைமுடி.
  • குலை குலையாய் வாழைப்பழம் மலையில் அழுகிக் கீழே விழுந்தது.
  • ஆடுற கிளையில ஒரு கிளை தனிக்கிளை; தனிக்கிளை தனில் வந்த கனிகளும் இனிக்கலை.
  • வீட்டுக்கிட்ட கோரை; வீட்டுக்கு மேல கூரை; கூரை மேல நாரை.
  • கொக்கு நெட்டக் கொக்கு; நெட்டக் கொக்கு இட்ட முட்டை கட்ட முட்டை.
படம்: அப்புசிவா

என்ன சிட்டூஸ்.. விழுந்து  விழுந்து  சிரிச்சீங்களா.. ?

முக்கியமான கடைசி கண்டிஷன்  விழுந்து சிரிக்கும் போது  அடிப்பட்டா கம்பேனி பொறுப்பாகாது!

1 Comment

  1. Avatar

    It was very interesting da. Keep going preethi dear🍫🍫🤩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *