வணக்கம் செல்ல பூஞ்சிட்டுகளே !!!
இந்த மாத இது எப்படி இருக்கு பகுதில நாம பாக்கப்போறது ஒரு குட்டி சிறார் நாவல்!
என்ன பேரு? ஐஸ்க்ரீம் பூதம்
எழுதினது யாரு? எழுத்தாளர் பா ராகவன்
யாரெல்லாம் படிக்கலாம்? தமிழ்ல நல்லா வாசிக்க தேர்ந்த எல்லா குட்டீஸும் படிக்கலாம்.
குறிப்பா சொல்லணும்ன்னா 8 வயசுல இருந்து படிக்கலாம். 8 வயதுக்கு கம்மியா இருக்கிற குட்டீஸுக்கு அவங்க பெற்றோர் வாசிச்சுக் காட்டலாம்.
என்ன கதை?
ஒரு அழகான ஊரு. ஊருல ஒரு “பெரிய” பண்ணையார். அவர் கட்டின ஒரே ஒரு பள்ளிக்கூடம். அதுல படிக்கிற சுட்டி பசங்க நாலு பேரு. இவங்களுக்கு நடுவுல ஒரு ஐஸ்க்ரீம் பூதம்.
பூதம் யாரு, என்ன பண்ணுச்சு யாரை சாப்ட்டுச்சுன்னு தெரிஞ்சுக்க இந்த சுவாரசியமான கதையப் படிச்சு தெரிஞ்சுக்கலாம்.
இந்த குட்டி நாவலோட கூடுதல் சிறப்பு என்னன்னா நம்ம எல்லாருக்கும் பிடிச்ச ஐஸ்க்ரீம் மாதிரி ஷார்ட் அண்ட் ஸ்வீட்டா இருக்கிற ருசிப்பான வாசிப்பு நடை.
எங்க படிக்கலாம்? அமேசான் கிண்டில்
எப்படி படிக்கலாம்? பெற்றோர் வழிகாட்டலோட அமேசான் கிண்டில்ல இந்த புத்தகத்த தரவிறக்கி அவங்கங்க தொலைபேசி இல்லன்னா கிண்டில் டிவைஸ்ல வாசிக்கலாம் .
எவ்வளவு நேரத்துல படிக்கலாம்? : இந்த நாவல்ல மொத்தமா 12 குட்டி அத்தியாயங்கள் இருக்கு. குறைஞ்சது ஒரு மணி நேரம், சிரிச்சு சிரிச்சுப் படிச்சா ஒன்றரை மணிநேரத்துக்குள்ள படிச்சிடலாம்!
என்ன பூஞ்சிட்டுகளே, ஐஸ்கிரீம் பூதத்தை பாக்க தயாராகிட்டீங்களா!!
ஓம் ரீம் ட்ரீம் ஐஸ் க்ரீம் தூம்ம்ம்ம் ததா!!