நூல்: வானத்துடன் டூ
ஆசிரியர்: விஷ்ணுபுரம் சரவணன்.
ஆசிரியர் குறிப்பு: சிறார் எழுத்தாளர், கதை சொல்லி.
வாசிப்பு அனுபவம்:
மொத்தம் 12 குட்டிக்கதைகள்.
வானத்துடன் டூ-
ஒரு சிறிய குழந்தைக்கும், இயற்கைக்கும் இடையில் ஒரு வேண்டுகோள். கடைசியில் குழந்தையை ஜெயிச்சது இயற்கை. குழந்தையிடம் விட்டுக் கொடுத்து விட்டது என்று அழகாகக் கூறியுள்ளார்.
அடுத்தது சிவப்புக் கிளியைக் காணோம் என்ற கதை, குழந்தைகளுக்கென்று ஒரு உலகம் இருக்கு.. அதில் உள்ள நியாயங்களும் கற்பனைகளும் வித்தியாசமானது என்பதை உணர்த்தியது.
வேட்டை ராஜா கதையில் ஒரு நாட்டின் அரசன் நாடு, காடு இரண்டையும் சரியாக நிர்வகிப்பவனே என்பதை உணர்த்துவதாக இருந்தது.
இதில் எனக்குப் பிடித்தக் கதை காணாமல்போன மயில். மீதிக் கதைகளை நீங்களே படித்துப் பாருங்கள். உங்கள் நண்பர்களுக்கும் சொல்லுங்கள் நன்றி.
வானம் பதிப்பகம்.
வானத்துடன் டூ விலை ₹ 50
செல் : 9176549991
என் பெயர் ஜெயாசிங்காரவேலு.நான் கரூரில் இருக்கிறேன்.இரண்டு வருடமாக தளங்களில் எழுதி வருகிறேன்.கணிதம்,சிறப்புக்கல்வி படித்துள்ளேன்.