கீச் கீச் கீச்!

எப்படியிருக்கீங்க குட்டிச் செல்லங்களே!

செப்டம்பர் ஐந்தாம் தேதி, ஆசிரியர் தினம்!

மாதா, பிதா, குரு தெய்வம்!  அம்மா, அப்பாவுக்கு அடுத்தபடியாக, நம்மை நெறிபடுத்தி, வாழ்வின் வழிகாட்டியாகத் திகழ்வது, நம்முடைய ஆசிரியர்கள் தாம்! எனவே உங்களுக்குப் பிடித்த ஆசிரியரை, நன்றியுடன் நினைவு கூறும் தினம் இது!

ஆசிரியர் தினத்தில், நீங்கள் முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டிய ஓர் ஆளுமை இருக்கின்றார்!  அவர் தாம், சாவித்திரி பாய் புலே!  ‘இவர் யார் தெரியுமா?’ பகுதியில், இவரைப் பற்றிப் படித்து, அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.

ஆசிரியர் தினத்துக்காக வைக்கப்பட்ட ஓவியப் போட்டியில், கலந்து கொண்ட உங்கள் அனைவருக்கும் நன்றி.  பரிசு பெற்ற ஓவியங்கள் பற்றிய விபரம், ‘அறிவிப்புகள்’ பகுதியில் காணுங்கள்.

ஆகஸ்ட் மாத ஓவியப் போட்டியில், வென்றவர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களும், கதை புத்தகங்களும் அனுப்பியிருக்கிறோம்; கதை மற்றும்  பாட்டுப் போட்டிகளில், மிகச் சிலரே கலந்து கொண்டதால், கலந்து கொண்ட அனைவருக்கும், பரிசுகள் வழங்கியிருக்கிறோம்.   மகிழ்ச்சி தானே குழந்தைகளே!

குழந்தை எழுத்தாளர்கள், திரு விழியன் மற்றும் திரு கொ.மா. கோ இளங்கோ எழுதிய அனிதாவின் கூட்டாஞ்சோறு நட்சத்திர விழிகள், ராஜா வளர்த்த ராஜாளி ஆகிய நூல்களை, இம்முறை பரிசுப் புத்தகங்களாக தேர்வு செய்திருக்கிறோம். கதைகளை வாசித்த அனுபவத்தை, மறக்காமல் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

 “இது எப்படியிருக்கு?” என்ற பகுதியில், குழந்தை எழுத்தாளர் திரு கன்னிக்கோயில் ராஜா அவர்களின், கதை சொல்லும் காணொலி காட்சியின் இணைப்பைத் தந்துள்ளோம்.  அதில் அவர் எழுதிய கதைகளைச் சிறுவர்களும், பெரியவர்களும் சுவாரசியமாகச் சொல்கிறார்கள்.  கேட்டு ரசியுங்கள். 

ஊர் சுத்தலாம் வாங்க என்ற ‌புதிய ‌பகுதியில் பூஞ்சிட்டு உங்களை ஒவ்வொரு வாரமும் சுற்றுலாவிற்கு அழைத்துப்‌போக வருகிறது. இந்த வாரம் பூஞ்சிட்டோடு எந்த ஊரைச் சுற்றப் போறீங்கன்னு படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

உங்களுக்குப் பிடித்த கதைகளையும் கட்டுரைகளையும்‌ நம் யூட்யூப் சேனலில் கண்டு, கேட்டு மகிழுங்கள்.

இம்மாத பூஞ்சிட்டில் வெளியாகியிருக்கும் கதைகளை வாசித்து, உங்கள் கருத்துக்களை, எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். அப்போது தான் உங்கள் விருப்பம் அறிந்து, அதற்கேற்ப மேலும் பல சுவாரசியமான பகுதிகளை, எங்களால் பூஞ்சிட்டில் அறிமுகப்படுத்த முடியும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments