இந்திய விமானப்படை தினம்

சுட்டீஸ்! இந்த அக்டோபர் மாதத்தில் நம் நாட்டில் மிகச் சிறப்பான தினம் ஒன்றைக் கொண்டாடுகிறோம். அது என்னவென்று பார்க்கலாமா?

October 8

இந்திய விமானப்படை தினம்.

Indian Airforce Day

இந்திய வான்படை அல்லது இந்திய விமானப் படை (IAF, Bhartiya Vayu Sena) இந்தியப் பாதுகாப்பு படைகளின் ஒரு அங்கமாகும். இது இந்தியாவை எதிரிகளின் வான்வழித் தாக்குதலில் இருந்து பாதுகாத்தலையும், வான்வழித் தாக்குதலை முன்னின்று நடத்துதலையும் குறிக்கோளாகக் கொண்டது.

இந்திய வான்படை 1932ஆம் ஆண்டு அக்டோபர் 8ஆம் நாள், இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்டது.

ஆரம்பத்தில் ஆங்கிலேயப்படையின் ஒரு அங்கமாகவே இது செயல்பட்டது. இரண்டாம் உலகப் போரில் ஜப்பானிய பர்மா படையை வெற்றி கொள்ளவதில் முக்கிய அங்கம் வகித்தது. 

இந்திய விடுதலைக்குப் பின்னர், இப்படை முற்றிலும் இந்திய நாட்டைச் சேர்ந்த முக்கியமான மூன்று படைகளுள் ஒன்றாக மாறியது. 

தற்பொழுது ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8 ஆம் தேதி இந்திய வான்படை நாள் கொண்டாடப்படுகிறது.  இந்திய விடுதலைக்கு பின் இந்தியப் பாதுகாப்பு படையின் ஒரு பிரிவானது.

இந்திய வான்படை சுமார் 170,000 வீரர்களைக் கொண்டுள்ளது. சுமார் 1,130 போர்விமானங்களும் 1,700 மற்ற பயன்பாட்டு விமானங்களும் படையில் உள்ளன. இந்திய வான்படை உலகில் நான்காவது பெரிய வான்படையாகத் திகழ்கிறது. அண்மைய காலத்தில் இந்திய வான்படையில் பெரிய அளவிலான நவினமயமாக்கல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுகின்றன. இப்படைக்கு இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்களே முதற் பெரும் படைத்தலைவர் ஆவார்.

இந்திய ஜனாதிபதி அனைத்து இந்திய ஆயுதப்படைகளின் தலைமைத் தளபதி மற்றும் விமானப்படைத் தலைவராக உள்ள தலைமைத் தளபதி ஆவார். இந்திய விமானப் படைத் தலைவராக இந்திய விமானப்படை தளபதி இருக்கிறார். இந்திய விமானப்படைத் தளபதிக்கு உதவியாக ஆறு அதிகாரிகள் உள்ளனர். அவர்கள் அனைவருமே விமானப்படையின் மார்ஷல் பதவியில் உள்ளனர்.

என்ன சுட்டீஸ்! நம்ம நாட்டோட விமானப்படை பற்றித் தெரிஞ்சுகிட்டீங்களா! நான் சும்மா முக்கியமான தகவல்களை மட்டும்தான் சொல்லியிருக்கேன்!நீங்க பெரிய க்ளாஸ் போகப் போக இதைப் பற்றியெல்லாம் உங்க பாடத்தில கத்துப்பீங்க! 

சரி! அடுத்த மாதம் வேறொரு நல்ல தகவலோட வரேன்!

அது வரைக்கும் சமூக இடைவெளியை பின்பற்றி, சோப் மற்றும் ஹேன்ட் சானிடைசர் பயன்படுத்தி, சுத்தமா இருங்க!

சமத்தா இருங்க!

பை பை! 

*******************

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *