தோ தோ நாய்க்குட்டி
தொடர்ந்து வரும் நாய்க்குட்டி
பாச மிக்க நாய்க்குட்டி
பாலை நக்கும் நாய்க்குட்டி
வாலை ஆட்டும் நாய்க்குட்டி
எலும்பைக் கடிக்கும் நாய்க்குட்டி
லொள் லொள் நாய்க்குட்டி
காவல் காக்கும் நாய்க்குட்டி
நன்றி மறவா நாய்க்குட்டி
உற்ற தோழன் நாய்க்குட்டி
Image Source: unsplash.com