குழந்தைகளே…இன்னைக்கு நூலினை வைத்து ஒவியம் உருவாக்கலாமா?
தேவையான பொருட்கள் :
காகிதம்
சற்று தடிமனான நூல் (உல்லன் நூல்)
வண்ண பெயிண்ட்கள்
செய்முறை
உங்களுடைய காகிதத்தை இரண்டாக மடித்துக் கொள்ளுங்கள். மடித்த காகிதத்தினுள், நீங்கள் வர்ணத்தில் தோய்த்த நூலினை நீங்கள் விரும்பும் வகையில் வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது, காகிதத்தினை மூடி, மேலே ஒரு கனமான புத்தகத்தினை வைத்து அழுத்தம் கொடுக்கவும்.

கனமான புத்தகம் அப்படியே இருக்கட்டும். இப்போது மெல்ல, நூலினை உருவி எடுக்கவும். எடுத்த பின், இப்போது உருவாகி இருக்கும் அழகிய வண்ணப் படத்தைக் கண்டு மகிழுங்கள்.

முயற்சித்துப் பாருங்கள் குழந்தைகளே! உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.