வணக்கம் குட்டி செல்லங்களே!

அனைவருக்கும் தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்! 

குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!

எல்லா நாட்களும் வீட்டில் இருப்பதால் விடுமுறைகள் சுவை குறைந்து போனாலும், நம் குவாரன்டைன் நாட்களில் சிறு வண்ணம் சேர்க்க  விழாக்காலம் வந்திருக்கிறது. அதுவும் நம் விழாக்களின் சூப்பர் ஸ்டார் தீபாவளி உங்களுக்கெல்லாம் மிகவும் பிடித்தப் பண்டிகையல்லவா?  பாதுகாப்பான முறையில் பட்டாசு நிறைய வெடித்தீர்களா? வயிறு நிறையச் சாப்பிட்டீர்களா?  இதோ உங்கள் கொண்டாட்டத்தை இன்னும் சுவாரஸ்யமாக்க நம் பூஞ்சிட்டு இதழின் இந்த மாத பதிப்போடு வந்திருக்கிறோம்!  உங்களுக்கு பிடித்த கதைகள், கதைத் தொடர்கள், அறிவியல் துணுக்குகள், பொது அறிவுத் தகவல்கள்  மற்றும்  விளையாட்டு பகுதிகள் என எல்லாமே இந்த முறையும்  உங்கள் வாசிப்புக்காக காத்திருக்கின்றன. 

தீபாவளி சிறப்பு ஓவியப்  போட்டியில் தங்கள் கற்பனை வளமும், ஓவியத் திறமையும் கொண்டு போட்டி போட்ட அனைத்து செல்வங்களுக்கும் எங்கள் வாழ்த்துக்கள்! இன்னும் இரண்டு நாட்களில் போட்டியின் முடிவுகள் நம் தளத்தில்  அறிவிக்கப்படும்.

அடுத்த மாதத்திற்கான போட்டிகள் பற்றிய இனிய ஆச்சரியம் அளிக்கக் கூடிய  அறிவிப்பு இன்னும் சில நாட்களில் நமது வலைதளத்தில் வெளியிடப்படும். மிஸ் பண்ணிடாதீங்க!

நம் தளத்தைப் பற்றிய உங்கள்  கருத்துகளை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள் @ [email protected]

Edition5 TitlePage
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments