குழந்தைகளே! பறவைகள் பலவிதம்! ஒவ்வொன்றும் ஒரு விதம்!

இந்த மாதம் உங்களுக்கு அறிமுகம் செய்யும் பறவையின் பெயர் தவிட்டுக்குருவி. தோட்டங்களில் அடிக்கடி நாம் காணக்கூடிய குருவி இது.  கல்லுக்குருவி, சிலம்பன் என்பவை இதன் வேறு பெயர்கள் ஆகும்.

thavittu kuruvi
Source: wikipedia

பெரும்பாலும் நான்கைந்து குருவிகள் சேர்ந்து, கூட்டமாக இருக்கும். சத்தமாக ஒலியெழுப்பும். பூச்சிகளையும், தானியங்களையும் உண்ணும்.  தரையில் தத்தித் தாவி நடக்கும். 

உடலின் மேற்பகுதியும், தொண்டையும் சாம்பல் நிறத்திலும், அலகு வெளிர் மஞ்சள் நிறத்திலும் இருக்கும்..  தலை வெளுப்பாகவும், வால் நுனியின் மேற்புறம் கருப்பாகவும் இருக்கும்.  வலசை செல்லாத பறவை. 

இக்குருவியைப் பார்த்து அடையாளம் கண்டுகொண்டீர்கள் என்றால், அது பற்றிய விபரங்களை எங்களுக்கு எழுத வேண்டிய முகவரி:- [email protected]

What’s your Reaction?
+1
2
+1
4
+1
1
+1
1
+1
1
+1
1
guest
1 கருத்து
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments