வணக்கம் குட்டிச் செல்லங்களே!

எல்லோரும் எப்படி இருக்கீங்க? கொரோனாவின் தாக்கம் நம்‌ தமிழகத்தில் சற்று குறைந்திருப்பதால் பல கட்டுப்பாடுகள் தளர்த்தியிருக்காங்க.. ஆனாலும் இன்னும் சில வாரங்களுக்குப் தேவையில்லாமல் வெளியே போகாதீங்க! போகவேண்டிய சூழ்நிலையில் முகக்கவசம் போட்டு, சமூக இடைவெளி கடைபிடிச்சிக்கோங்க, ஓகே?

ஆங்கிலத்தில் புகழ்பெற்ற secret garden  என்ற குழந்தை இலக்கியத்தின் தமிழ் மொழிபெயர்ப்பான ‘இரகசியப் பூந்தோட்டம்’ இந்த இதழில் முடிவடைந்திருக்கிறது. முழுக்கதையையும் ஒரே மூச்சில் இப்போது படிக்கலாம்.

புத்தம்புது குட்டிக்கதைகள், உங்கள் ஆர்வத்தைத் தூண்டும் கதைத்தொடர்கள், விளையாட்டுப் பகுதிகள், அறிவியல் பகுதிகள், டைனோசர் தொடர், பறவைகள் பலவிதம் தொடர், குட்டீஸ் சேர்ந்து சமைக்கும் கூட்டாஞ்சோறு, தங்கள் வாழ்க்கையையே பாடமாக மாற்றிய சாதனையாளர்கள் பற்றிய அறிமுகப் பகுதி, தமிழில் குழந்தைகளுக்கான இலக்கியங்களை உங்களுக்கு அறிமுகப்படுத்தும் ‘நூல் அறிமுகம்’ பகுதி   என உங்களுக்குப் பிடித்த எல்லாப் பகுதிகளும் இந்த இதழிலும் இடம் பெற்றுள்ளன.   ஒன்றுவிடாமல் எல்லாவற்றையுமே படிங்க.. படிச்சிட்டு உங்க கருத்துகளை மறக்காம எங்களோட பகிர்ந்துக்கோங்க..

கிறிஸ்துமஸ் சிறப்புப் போட்டியான, ‘படம் காட்டு! பரிசை வெல்லு!’ போட்டியில் எல்லோருமே பங்கெடுத்துக்கோங்க.. பரிசுகளை அள்ளுங்க!

-பூஞ்சிட்டு

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments