பூஞ்சிட்டுக்களே, இன்றைக்கு பல்வேறு வடிவங்கள் கொண்டு அழகிய பூனை செய்யலாமா?

தேவையான பொருட்கள்

பல வண்ண காகிதங்கள்

கத்தரிக்கோல்

செய்முறை

வண்ணக் காகிதங்களில் கீழ்க்கண்ட வடிவங்களை வெட்டிக் கொள்ளுங்கள்.

ஒரு பெரிய வட்டம் – முகத்திற்கு, இரண்டு குட்டி வட்டங்கள் – கண்களுக்கு

ஒரு செவ்வகம் – உடல் பகுதி

நான்கு சிறிய சதுரங்கள் – கால்களுக்கு

ஒரு சிறிய முக்கோணம் – மூக்கு, ஒரு நீள் முக்கோணம் – வால்

பெரிய வட்டத்தில், இரண்டு சிறிய வட்டங்களை கண்களாக ஒட்டவும். சிறிய முக்கோணத்தை, மூக்காக ஒட்டவும். வாய் மற்றும் மீசையை பேனா கொண்டு வரைந்து கொள்ளுங்கள். காதுகளுக்கு, இரண்டு சிறிய முக்கோணங்களை ஒட்டுங்கள். இப்போது, பூனையின் முகம் தயார்.

அடுத்து வட்ட முகத்தினை, செவ்வகத்தில் ஒட்டுங்கள். ஏற்கனவே உருவாக்கி வைத்திருக்கும் வட்ட முகத்தினை, செவ்வக வடிவ பூனை உடலில் ஒட்டுங்கள்.

நீள் முக்கோணத்தினை வாலாகவும், நான்கு சிறிய சதுரங்களை, நான்கு கால்களாகவும் ஒட்டி விடுங்கள்.

Cat

இப்போது, வடிவங்கள் கொண்டு செய்யப்பட்ட பூனை தயார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments