வணக்கம் பூஞ்சிட்டுகளே!

ஒரு வழியா 2020ஐ வழியனுப்பி வெச்சாச்சு..

2021 புத்தம்  புதுசா பிறந்தாச்சு..

இந்த புத்தாண்டை வீட்டில் எல்லாரோடையும் சந்தோஷமா வரவேத்திருப்பீங்கன்னு நம்பறோம்.

சுட்டிகள் எல்லோருக்கும் பூஞ்சிட்டு  சார்பாக இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

இப்போ வழக்கமான நம்ம கதைக்கு  வருவோமா?

இன்னைக்கு நாம  கதை  கதையாம் காரணமாம் பகுதில குடி’ன்னு முடியுற ஊரோட பெயர்க்காரணத்தைக் குடிக்க போறோம். மன்னிச்சு.. மன்னிச்சு.. படிக்கப்போறோம்!

குடி அப்படின்னா உறவினர்கள் கூட்டத்தோடு மக்கள் வாழும் நிலப்பகுதின்னு அர்த்தம்.

மேட்டுக்குடி அப்படின்னா மேடான பகுதில அமைந்த இடம் மற்றும் அதில் வாழும் மக்கள்.

காரைக்குடி அப்படின்னா  காரைச் செடிகள் அதிகமா இருக்கிற இடம் மற்றும் அதில் வாழும்  மக்கள்.

அப்படின்னா திட்டக்குடி’ ன்னா திட்டம் போட்டுக்கிட்டே வாழுற இடமான்னு  தானே கேக்கறீங்க.. ?!

அதான இல்ல .. ரொம்ப காலத்துக்கு முன்னாடி இங்க வசிஷ்டர் என்ற முனிவரும் அவர் சந்ததியரும் வாழ்ந்ததால வசிட்டர் குடி’ங்கிற பேர் காலப்போக்குல மாறி திட்டக்குடி ன்னு இன்னைக்கு ஆகிருச்சு. இத நம்ம தமிழ்ல மருவி’ன்னு தொல்வாங்க . அதாவது  பேச்சுவழக்குல மாறின பேர். திட்டக்குடி மாதிரி  நிறைய ஊர்ப் பெயர்கள் காலத்துக்கு ஏற்ப மறுவி  வந்திருக்கு. அப்படி  ஒரு ஊரு  தான்  தூத்துக்குடி.

tuti1
Beachside of Tuticorin Courtesy: tamilnativeplanet.com

தூத்துக்குடி நம்ம தமிழகத்தோட முக்கியமான துறைமுகப்பகுதி. இன்னைக்கு  நேற்று’ன்னு இல்லாம  சங்க காலத்துக்கும் முந்தின  காலம்  வரை  துறைமுகமாக  இருக்கிற   பெருமை நம்ம  தூத்துக்குடிக்கு  உண்டு.

tuti2
Harbour of Tuticorin Courtesy Dinamalar

தூத்துக்குடி  வணிகத்தில்  அதாவது  வியாபாரத்தில்  கொடிக்கட்டி பறந்த ஊரும் கூட.

ரோமானியர்கள், கிரேக்கர்கள்ன்னு  வியாபாரம் பண்ண  நிறைய  வணிகர்கள் அந்த காலத்துலயே  தூத்துக்குடிக்கு வந்த வரலாற்றுக்குறிப்புகள்  இருக்காம்.

நம்ம “யூ டூ புரூட்டஸ் ..?!” சீஸர், மார்க்கோ போலோ , உட்பட பல புகழ்பெற்றவர்கள் தங்களோட  வரலாற்றுப் பக்கங்களில் தூத்துக்குடி பத்தின  தகவல்களையும்  அதன்  சிறப்புகளையும் நிறைய இடத்தில   பதிவு பண்ணிருக்காங்க..

tutu3
Tuticorin Harbor, mycitythoothukudi.com

எல்லாம்  சரி,, அது  என்ன  தூத்துக்குடி ? அப்படின்னு தானே  யோசிக்கறீங்க..

தூத்து அப்படின்னா நீர்வளம் மிக்கப் பகுதின்னு அர்த்தமாம். ஆண்டான்டு காலமாக கடற்கரை துறைமுகம்ன்னு நீர் போக்குவரத்து, வர்த்தகம் அதை சார்ந்த தொழில்கள்ன்னு இருந்து வந்ததால இந்த இடத்து தூத்துக்குடி’ன்னு பேர் வந்ததுன்னு சொல்றாங்க. இதை உறுதிப்படுத்துற மாதிரி கங்கைக்கொண்டான் என்கிற  ஊர்ல கிடைச்ச கல்வெட்டுல “தூற்றிக்குடி” ‘ன்னு தூத்துக்குடி பத்தின குறிப்பு கிடைச்சிருக்கு. இப்படி தூற்றிக்குடி ‘தூத்துக்குடி’ ஆகி பின்னால ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்துல அவங்க வாயில சிக்கி சின்னாபின்னமாகி ஆங்கிலத்துல Tuitcorin’ன்னும் ஆகிருச்சு!

ஆசை ஆசையா நமக்கு பேர் வச்ச அம்மா அப்பா, நாம செய்யுற செயலுக்கேற்ப நம்மள ‘வாலுக்குட்டி.’. ‘சமத்துக்குட்டி, ‘குட்டிப்பிசாசு’ன்னு செல்லப்பேர் வச்சு கூப்பிடறதில்லையா அதே மாதிரி என்ன தான் ஊருக்கு ஒரு பேரும் அதுக்கு பின்னால  ஒரு கதையும் இருந்தாலும் ஊரோட சிறப்புக்கேற்ப நிறைய ஊர்களுக்கு ஒரு செல்லப்பேர் உண்டு.

அப்படி தூத்துக்குடியோட செல்லப்பேர் முத்து நகர்.

PearlCity’ன்னு ஆங்கிலத்துலயும் அழைக்கப்படுது. இந்த பேருக்கு காரணம் தூத்துக்குடி’ல கடலில் இறங்கி முத்து எடுக்குறது  மிகப்மிகப் புகழப்பெற்றது. இதை முத்துக்குளித்தல்’ன்னு சொல்வாங்க. அதாவது கடலுக்கு அடியில் ஒரு குறிப்பிட்ட ஆழத்துல மூச்சை அடக்கி சுறா மீனுக்கெல்லாம் தப்பிச்சு ஒருசில மணித்துளிகள்ல சிப்பியெல்லாத்தையும் எடுத்துட்டு மறுபடியும் கடல் மேல வரது தான்  முத்துக்குளித்தல். இந்தியாவிலேயே அதிகமான முத்துக்குளி தூத்துக்குடில தான்’ன்னு சொல்ற அளவுக்கு இங்க இது ப்ரபலமானது. பளிச் பளிச்ன்னு அழகழகான முத்துக்கள் கொட்டிக்கிடக்கிறதால தூத்துக்குடிக்கு முத்துநகர் என்ற பேர் ரொம்ப பொருத்தம் தானே குட்டீஸ்?!

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments