“ஹாய் பூஞ்சிட்டூஸ் எப்படி இருக்கீங்க… எல்லாருக்கும் வினிதா, ராமு, தாத்தா, பாட்டி மற்றும் நம் பூஞ்சிட்டு குழுவின் சார்பாக இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.

  “பாட்டி பாட்டி! எங்க இருக்கீங்க?” என அழைத்தபடி பட்டாடை சலசலக்க ஓடி வந்தாள் வினிதா.

 “ஹே வினிதா எங்க இவ்வளவு வேகமா ஓடுற?” என குட்டி வேஷ்டி தரையில் புரள அவளைப் பின் தொடர்ந்து வந்தான் ராமு.

   வேகமாக ஓடிவந்த இருவரையும் “ ஏ.. பசங்களா! உள்ள என்ன பண்ணிட்டு இருக்கீங்க.. எல்லாரும் வாசலுக்கு வாங்க பொங்கல் வைக்கலாம்” என அழைத்தார் பாட்டி.

வெளியே வந்த இருவரும் அனைவருடன் சேர்ந்து பொங்கல் வைத்துக் கொண்டாடினர்.

பிறகு ராமு, பாட்டியிடம், “பாட்டி இன்னிக்கு  பொங்கல் இல்லாம வேற இனிப்பு செய்யமாட்டீங்களா?” என்றான்.

அதற்கு பாட்டி.. ”ராமு கண்ணு இன்னிக்கு பச்சரிசி பாயாசமும் செய்வோம்… அது உனக்கு ரொம்ப பிடிக்கும்” என்றார்.

      “பச்சரிசி பாயாசம் செய்யறதுக்கு ஒரு சின்ன டம்ளர்ல பச்சரிசி எடுத்துக்கணும். அத சூடான வெறும் வாணலில செகப்பா வறுத்து எடுத்துக்கணும். அதே மாதிரி  இரண்டு ஸ்பூன் கடலைப்பருப்பையும் நல்ல வறுத்து எடுத்துக்கனும்.

   சின்ன ஜார்ல இது ரெண்டையும் போட்டு இது கூட ஒரு கைப்பிடி தேங்காய் ஏலக்காய்  வாசனைக்கு போட்டு தண்ணீர் விட்டு மைய அரைச்சிக்கனும்.

அந்தக் கலவையை ஒரு பாத்திரத்தில் மாத்தி மேற்கொண்டு மூணு டம்ளர் தண்ணீர் சேர்த்து கலந்துக்கணும். இப்ப நம்ம அடுப்ப பத்த வச்சு இத மேல வைக்கலாம்.

   “பாட்டி பாட்டி நாந்தான் அடுப்பில வைப்பேன்” என கூறியபடி வினிதா அதை அடுப்பில் வைத்தாள்.

“ம்ம் அப்றம் என்ன பாட்டி செய்யனும்?”

  “அத பொறுமையா கிளறி விட்டுக்கிட்டே இருக்கனும். ராமு நீங்க இப்ப என்ன பண்ணனும்னா.. இதுல இனிப்பு சேர்க்க வெல்லத்தை இடிக்கனும் இந்தாங்க” என கூறியவாறே ஒரு உருண்டை வெல்லத்தை அவனிடம் கொடுத்தார்.

“சரி பாட்டி “ என கூறியவாறு வெல்லத்தை இடித்தான் ராமு.

“பாட்டி சீக்கிரம் வாங்க. இந்தப் பாயாசம் கெட்டியாகுது” என சப்தமிட்டால் வினிதா.

அதைப் பார்த்த பாட்டி சிரித்துக் கொண்டே “கலக்கும் போது கொஞ்சம் கெட்டிபடரா மாதிரி இருந்தா மேல ஒரு  டம்ளர் தண்ணீர் சேர்த்துக் கலக்கனும். இந்த அரிசி கலவை நல்லா வெந்து கொதிக்கனும்.

அதற்குள் ராமு வெல்லத்தை இடித்து தரவும் ஏற்கனவே அரிசி அளந்த டம்ளரில் இரண்டரை (2½) டம்ளர் வெல்லம் எடுத்து அது மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்தார். வெல்லம் கரைந்து லேசாக கொதிக்கவும் அதை வடிகட்டி கொதித்துக் கொண்டு இருந்த பாயாசக் கலவையில் சேர்த்து நன்றாக கிளறி விட்டார்.

 நன்றாக பாயாசம் கொதித்ததும் அதில்  நெய் சேர்த்து வறுத்த முந்திரி திராட்சையை கலந்து ஆஃப் செய்து விட்டார். அதை கீழே இறக்கி வைத்து அதில் தேவைக்கேற்ப ஒரு டம்ளர் பால் சேர்த்து கலக்கி எல்லோருக்கும் பகிர்ந்தளித்து உண்டு மகிழ்ந்தனர்.

  “பாட்டி தாத்தா! இந்தப் பாயாசம் ரொம்ப நல்லா இருக்கு”… என கூறி இருவரும் அணைத்துக் கொண்டனர்.

paayasam

குட்டீஸ்! உங்களுக்கு இந்த பதிவு பிடிச்சிருக்கும்னு நினைக்கிறேன். நீங்களும் சாப்டு பாத்து சொல்லுங்க. உங்களுக்குப் பிடிச்ச ரெசிபிய சொல்லுங்க. அடுத்த மாதம் அத எப்டி செய்யறதுனு பதிவா போடலாம். சரியா பூஞ்சிட்டுகளே!

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments