ஆசிரியர் : ‘ பஞ்சு மிட்டாய்’ பிரபு

பதிப்பகம் : வானம் பதிப்பகம்

விலை : ₹40

வாசிப்பு அனுபவம் :

பள்ளி மாணவியான வனிதாவிற்கு வண்ணங்கள் தான் நண்பர்கள். அவைகளோடு அவளால் பேசவும் முடியும். அவைகள் பேசுவதை கேட்கவும் முடியும். ஆசிரியர் பள்ளியில் உங்களுக்குப் பிடிச்ச கலரு என்ன? என்று கேள்வி கேட்கிறார். அதற்கு எந்த வண்ணத்தை சொல்லுவது என்று வனிதா குழம்ப மற்ற வண்ணங்கள் என்னைச் சொல்லு என்று சண்டை போடுகிறார்கள். எல்லா வண்ணங்களும் காணாமல் போய்விடுகிறார்கள். அவர்களை எப்படி வனிதா கண்டுபிடிக்கிறாள்? அவளுக்கு முன்பு பிடிக்காமல் இருந்த கருப்பு வண்ணத்தை இப்போது பிடிக்கக் காரணம் என்ன? என்ற கேள்விகளுக்குப் படித்துப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். நிறங்களைப் பற்றிய செய்திகள் கட்டங்களில் கொடுக்கப்பட்டுள்ளது.

https://www.commonfolks.in/books/d/enakku-pidichcha-colouru

ஆசிரியர் குறிப்பு:

2015லிருந்து தனது குடியிருப்பிலுள்ள கதைகள், பாடல்கள், விளையாட்டுக்கள் என சிறார் நிகழ்வுகளை நண்பர்களுடன் இணைந்து நடத்தி வருகிறார். ‘பஞ்சு மிட்டாய்’ எனும் சிறார் காலாண்டு இதழையும் கொண்டு வருகிறார்.

guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments