வணக்கம் பூஞ்சிட்டூஸ்

போன மாதம் வரையிலும் கலிபோர்னியா மாகாணத்த நல்ல சுத்தினோமில்லையா இப்போ அதுக்கு பக்கத்து  மாகாணமான நெவாடா மற்றும்  அரிசோனால என்னவெல்லாம் இருக்குன்னு பாக்கப் போறோம்..

என்ன குட்டீஸ் வண்டிய கிளப்புவோமா?

முதல்ல நாம பாக்கப்போறது

தி க்ராண்ட் கேன்யன்’னு அழைக்கப்படுகிற மாபெரும் செங்குத்து பள்ளத்தாக்கு..

மாபெரும்ன்னா என்னன்னா நாம ஹோட்டல் போனா ஆசையா வாங்கி சாப்பிடுவோமோ பேமிலி தோசை அதப்போல பள்ளங்களிலேயே ரொம்ப ரொம்ப ரொம்ப பெரியன்னு அர்த்தம்.

செங்குத்துன்னா நேரா கீழப்  பார்த்தா தலை சுத்துற அளவுக்கு ஆழமாவும் நீளமாகவும் உயரமாகவும் இருக்கறதுன்னு அர்த்தம்..

அதுலயும் நம்ம பாக்கப்போறது உலகத்துலேயே பழமையான பள்ளத்தாக்கு.. கிட்டத்தட்ட 2 மில்லியன் வருஷங்களுக்கு முன்ன இயற்கையா உருவானதாம்.. இதுல இருக்கிற பாறை,  மண்ணு, கல்லோட அமைப்பு, முளைக்கிற செடி கொடி மரம்’ன்னு எல்லாமே வருஷக்கணக்குல  ஆராய்ச்சி பண்ற அளவுக்கு விஷயம் இருக்காம்..

இத்தாம் பெரிய பள்ளம்  எங்க இருக்குன்னு தான பாக்கறீங்க?

அதத்தான் அடுத்து சொல்ல வரேன்,

கொலராடோ ஆறோட இரண்டு பக்கமாகவும் தெற்கு வடக்கு கிழக்கு மேற்குன்னு விரிஞ்து இது அரிசோனா மாகானத்துல ஆரம்பிச்சு நெவாடா மாகானத்துல முடியுது.

இதோட வடக்கு தெற்கும் அரிசோனாவிலயும் மேற்கு பகுதி நெவாடாலயும் இருக்கு..

முதல்ல இத ஆராய்ச்சி பகுதியா தான் வெச்சிறுந்துருக்காங்க. 1919க்கு அப்புறமா இத பொதுமக்கள் பார்வைக்கு திறந்து விட்டாங்க..

சரி சரி நிறைய கதை சொல்லிட்டேன் இப்போ கொஞ்சம் படம் காட்டுவோமோ?

arizona1

இது தான் ப்ரம்மாண்டமான கேன்யன் பள்ளத்தாக்கின் ஒரு பகுதி

எவ்வளவு ப்ரம்மிப்பா இருக்குள்ள. நீங்க போட்டோவுல பாக்க வெயில் அடிக்கறாப்ல இருக்கும். ஆனா உண்மையில குளிர் கொள்ளாது. பின்ன அம்புட்டு உயரத்துல வானத்துக்கு கொஞ்சம் கீழே பூமிக்கு ரொம்ப மேல இருந்தா குளிராதா ?

arizona2

உறைபனிக்காலத்துல பள்ளத்தாக்கோட தோற்றம்

அமெரிக்காவுல அதிகமா சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்படுகிற இடங்கள்ல இது முக்கியமானது

வெயில் மழை பனி எல்லாம் இங்க கணக்குல வராது.

நான் முன்னாடி சொன்னேனே இது ரெண்டு ஊரத்தாண்டுதுன்னு..

இது வரைக்கும் நீங்க பாத்தது அரிசோனா பக்கத்தோடது.

இப்ப நீங்க பாக்கப்போறது நெவாடா பக்கத்தோட ரொம்ப பிரபலமான ஸ்கைவாக்ன்னு அழைக்கப்படுகிற மேற்கு பகுதி..

ரொம்ப பெரிசுன்னு சொன்னியே எப்படி அந்த கடைசில இருந்து இந்த கடைசிக்கு வந்த அப்படின்னு தான யோசிக்கிறீங்க.. மனுஷங்க நீங்க இந்த தூரத்த கார்ல கடக்கனும்மன்னாலே  குறைஞ்சது ஆறுமணி நேரமாவது ஆகும். நான் தான் உங்க செல்ல பூஞ்சிட்டாச்சே.. ஸ்வைங்……….ன்னு பறந்து வந்துட்டேன்..

arizona3

இதோ இங்க கம்பி போட்றுக்காங்கள்ல?

குறிப்பிட்ட தூரம் வரைக்கும் பிடிக்க கம்பியும் கண்ணாடி தரையும் போட்ருக்காங்க.. இந்த கம்பிய பிடிச்சுக்கிட்டே குனிஞ்சு தரைய பாத்தா சும்மா ஜிவ்வுன்னு இருக்கும் கண்ணுக்கே தெரியாத அளவுக்கு நீண்டுக்கிட்டே போற செங்குத்தான பள்ளத்தாக்கு மேல நாம நின்னுக்கிட்டு இருப்போம்.

நம்ம வைகை புயல் வடிவேல் சொல்றது போல பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மெண்ட் வீக்’ங்கறத போல கம்பீரமா கம்பிய பிடிச்சிக்கிட்டு போட்டோவுக்கு போஸ் கொடுக்கற கையும் கீழ கடகடன்னு பயத்துல ஆட்ற காலும் உயரத்துக்கும் காத்துக்கும் தாளம் போடும்..

இன்னொரு விஷயம்.. இங்க அரிய விலங்கினங்கள் நிறைய இருக்கும். குறிப்பா சொல்லனும்ன்னா

காட்டு அணில். நம்ம வீட்டு அணில் எல்லாம் தான் பாட்டுக்கு எதயாச்சும் கொரிச்சுக்கிட்டு செவனேன்னு அங்கயும் இங்கயும் துள்ளி ஓடிக்கிட்டு இருக்கும்ல..

ஆனா இந்த காட்டு அஅசல் சரியான சேட்டக்காரன். கோயில சுத்தி வர நம்ம நெருங்குன தொந்தக்கீரங்களான குரங்குகள் மாதிரி வரவங்க போறவங்க கிட்டயெல்லாம் வம்பு பண்ணுமாம் இந்த காட்டு அணில் கூட்டம்.

அதுவாச்சும் அணில் அதுக்கு என்ன தெரியும். மனுஷங்க நாம தானே விலங்குகள் கிட்ட அதுவும் இந்த மாதிரி பழமையான இடத்துல உயிர்வாழ்ற விலங்குகள் கிட்ட பொறுப்பா நடந்துக்கணும்!

அப்படியில்லாம இங்க வர மனுஷங்க அணிலுக்கு சோறூட்டுறேன் தண்ணி வைக்கிறேன்னு அதுங்கள பழக்கி இப்போ இயற்கையான முறையில தனக்கான உணவுகளை தேடி சேகரிச்சு வாழ்ற பழக்கத்தை மறக்க ஆரம்பிச்சிருச்சுங்களாம். அதோட விளைவு எப்போடா மனுஷங்க வருவாங்க அவங்ககிட்ட சாப்பிட ஆரம்பிக்கலாம்ன்னு மனுஷங்கள நம்பிய சாப்பாட்டு சூழலுக்கும் போயிருச்சுங்களாம். இத கூர்ந்து கவனிச்ச இயற்கை மற்றும் விலங்கு ஆர்வலர்களும் விஞ்ஞானிகளும்

இனி இங்க வர மனுஷங்க யாரும் இங்க இருக்கிற எந்த விலங்குகளுக்கும் உணவு பரிமாறவோ விட்டுட்டுப்போகவோ கூடாதுன்னு செல்ல உத்தரவு போட்டுருக்காங்களாம்.

இயற்கை வளம், நீர் வளம், சுத்தமான காற்று, மர வளம், மண் வளம், விலங்குகள் நலம்ன்னு மனுஷங்க எத்தன விஷயத்துல வீணா தலையிடறதால சங்கிலித்தொடர் மாதிரி என்னவெல்லாம் பின்விளைவுகள்  பாத்தீங்களா?

arizona4

சரி குட்டீஸ் நான் கேன்யன மேறகால போய் ஒரு ஜாலி ரவுண்ட் அடிச்சுட்டு வரேன்.. அடுத்த மாசம் சந்திப்போம்.. போலாம் ஸ்வைங்….

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments