குழந்தைகளே, இன்றைக்கு காகிதத்தில் அழகிய தேவதை செய்யலாமா?
தேவையான பொருட்கள்:
இரண்டு வெள்ளை காகிதம்
இரண்டு காகிதங்களையும் விசிறி மடிப்பு மடிக்கவும். இப்போது, ஒரு விசிறி மடிப்பு காகிதம் தேவதையின் உடலாகவும், மற்றொரு விசிறி மடிப்பு காகிதம் தேவதையின் இறக்கைகளாகவும் பயன்படுத்தவும்.
இப்போது, இறக்கையை தேவதையின் உடலுடன் சேர்த்து ஓட்டவும்.
அடுத்து, தேவதையின் முகத்திற்கு, ஒரு சிறிய வட்ட காகிதத்தில், ஒளிவட்டம், கண், மூக்கு போன்றவற்றை வரைந்து ஒட்டி விடவும். இப்போது, அழகிய தேவதை தயார்.