அரிக்கன் சட்டி பறங்கிக்காய்
கரடு முரடு பாகற்காய்
கள் குடுவை சுரைக்காய்
பள்ளம் மேடு பீர்க்கங்காய்
பச்சைப் பாம்பு புடலங்காய்
மெலிந்த விரல் வெண்டைக்காய்
ஊதாங் குழல் முருங்கைக்காய்
கோலிக் குண்டு சுண்டைக்காய்
ஒல்லி உடம்பு கொத்தவரை
குண்டு பல்பு கத்திரிக்காய்
குழல் விளக்கு வாழைத்தண்டு
காய்கறியில் சத்துக்கள் மிகவுண்டு
சேர்ப்போம் உணவில் அனுதினமும்
2021-04-15