குழந்தைகளே, இன்றைக்கு ஜிகினா பக்கத்தில், கை அச்சு அல்லது கைகளை சுவடு எடுத்து அழகிய மலர் ஓவியம் வரையலாமா?
தேவையான பொருட்கள்
- வண்ண பேனாக்கள்
- க்ரேயான் அல்லது வண்ண பென்சில்கள்
செய்முறை
குழந்தைகளே, உங்கள் கையை, காகிதத்தில் வைத்து, கை வடிவினை வரைந்து கொள்ளுங்கள். அவை தான் மலர்கள்.
அடுத்து, மலர்களின் தண்டுகளை வரைந்து கொள்ளுங்கள். கூடவே சில இலைகளும்.
அடுத்து, மலர்களுக்கு நீங்கள் விரும்பும் நிறத்தில் வண்ணம் தீட்டில் கொள்ளுங்கள். இலை மற்றும் தண்டுகளுக்கு பச்சை வண்ணம் தீட்டிக் கொள்ளுங்கள்.

இப்போது, அழகிய கை வடிவ மலர்கள் தயார். என்ன அழகாக இருக்கிறதா குழந்தைகளே ?
அழகு, எளிமை:)
மிக்க நன்றி சகோதரி.