வணக்கம் பூஞ்சிட்டூஸ்,
எல்லாரும் நெருப்பு பார்த்திருக்கீங்களா?
சாமி முன்னாடி எரியுற விளக்குல, மெழுகுவர்த்தி எரியும்போது, தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும்போதுனு கண்டிப்பா பாத்திருப்பீங்க, கிச்சன் பக்கம் போற குட்டீஸா இருந்தா அடுப்பு எரியும்போது பார்த்திருப்பீங்க.
நெருப்புக்கு இன்னொரு பெயர் என்ன?
தீ னு சொல்லுவோம் , வேற பெயர் உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க குழந்தைகளே.
தீ என்ன வண்ணங்கள் லாம் எரியும், கவனிச்சிருக்கீங்களா குட்டீஸ் ?
நான் மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு, ஊதா வண்ண சுடர்கள் பார்த்திருக்கேன்..
நெருப்பை எதுக்கெல்லாம் பயன்படுத்துறோம் ?
சமைக்க, விளக்கேற்றி வெளிச்சம் பெற, குப்பைகளை எரிக்க, குளிர்காய, இன்னும் எதுக்கெல்லாம் பயன்படுத்துறோம்னு கேட்டுத் தெரிஞ்சிக்கோங்க குட்டீஸ்.
சரி எந்த வண்ண நெருப்பு அதிக சக்தி வாய்ந்தது? அதாவது அதிகமா சுடும்?
மஞ்சள் கலர் சுடர் சாமி விளக்குல பார்த்திருப்போம். சிவப்பு ஆரஞ்சுலாம் விறகு அடுப்புல பார்த்திருப்போம்,
ஊதா வண்ணம் கேஸ் ஸ்டவ்ல பார்த்திருக்கிங்களா அதுதான் அதிகமா சுடும்.
அதுனாலதான் நம்ம பாட்டி காலத்துல அரிசி வேக ஆகுற நேரத்தை விட இப்போ கேஸ் ஸ்டவ்ல சீக்கிரமா வெந்துடும், நாம இப்போ சமையல் சீக்கிரம் செஞ்சிட்டு மத்த செயலில் கவனம் செலுத்த உதவியா இருக்கு:)
அப்புறம் நம்ம ஆதி மனிதர்கள் ரெண்டு கல்லை உரசி நெருப்பை கண்டுபிடிச்சாங்களாம், இப்போ நாம நெருப்பு எப்டிலாம் பத்த வைக்கிறோம்?
தீப்பெட்டி, லைட்டர் னு நெறைய புது கண்டுபிடிப்புகள்னால எளிமையா பத்த வச்சிடுறோம்.
இன்னும் நெருப்பு பத்தி செய்திகளைத் தேடி தெரிஞ்சிக்கலாமா?
அப்படித் தெரிஞ்சுக்கிட்டதை சொல்லுங்க குட்டீஸ்!