“ஹாய் பூஞ்சிட்டூஸ், அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!”, என்று அனுவும், பிண்டுவும் ஒன்றாக ஓடி வந்து குழந்தைகளை வரவேற்றார்கள்.

“பிண்டு, நியூ இயர்ல, அதுனால சூப்பரா ஈசியா ஏதாவது எக்ஸ்ப்ரிமெண்ட் செய்யலாமா ப்ளீஸ்!”, என்று கேட்டாள் அனு.

“ம்ம் ஈசியாவா செய்யலாமே! குட்டி பாராசூட் செய்வாமா? நான் சொல்ற பொருளை எல்லாம் சீக்கிரமா எடுத்து வா அனு!”, என அனுவை அனுப்பியது பிண்டு.

பட்ஜெட் ராக்கெட் செய்யத் தேவையான பொருட்கள்:

1. பேப்பர் கப் – 1

2. ப்ளாஸ்டிக் கேரி பேக்(மெல்லியது) – 1

3. கத்தரிக்கோல் – 1

4. நூல்கண்டு

“பிண்டு, நீ சொன்ன பொருளை எல்லாம் எடுத்துட்டு வந்துட்டேன்!”, என்று குதித்தபடி ஓடி வந்தாள் அனு.

செய்முறை:

1. முதலில் ப்ளாஸ்டிக் பையில் உள்ள கைப்பிடிகளை வெட்டி எடுத்துக் கொள்ளவும்.

2. பிறகு, பையின் நான்கு புறமும் சம அளவு தொலைவில் ஒவ்வொரு துளைகள் மொத்தம் நான்கு துளைகளை போட்டுக் கொள்ளவும்.

3. பேப்பர் கப்பின் மேல் விளிம்புப் பகுதியில் நான்கு துளைகளை போட்டுக் கொள்ளவும்.

4. 12 இஞ்ச் அளவிற்கு நான்கு துண்டு நூலை வெட்டிக் கொள்ளவும்.

5. பிறகு அந்த நூலின் ஒரு முனையை ப்ளாஸ்டிக் பையிலும், மறு முனையை பேப்பர் கப்பிலும் கட்டவும்.

6. இதே போன்று நான்கு நூல் துண்டுகளையும் நான்கு துளைகளிலும் கட்டவும்.

7. இப்போது பட்ஜெட் பாராசூட் தயார். நீங்கள் செய்ததை மாடியில் இருந்து கீழே பறக்கவிடுங்கள். நாம் தயாரித்த பாராசூட் அழகாய், மெதுவாக தரை இறங்குவதைப் பார்த்து ரசித்து மகிழுங்கள்.

BUDJET PARACHUTE
படம்: அப்புசிவா

பேப்பர் கப்பிற்குள் கற்கள், காகிதத் துண்டுகள் என வெவ்வேறு எடையுள்ள பொருட்களை தனித்தனியாக போட்டு‌ ஒவ்வொன்றையும் சோதித்துப் பாருங்கள்.

கற்கள் நிறைந்த பாராசூட் வேகமாக கீழே விழுமா? அல்லது

காகிதத்துண்டுகள் நிறைந்த பாராசூட் வேகமாக கீழே விழுமா?

கண்டுபிடியுங்கள் குழந்தைகளே!

அனு, “வாவ் பிண்டு, வீட்டுல உள்ள பொருட்களை வெச்சே சூப்பரா ஒரு பாராசூட் செஞ்சிட்டியே! ஆனா எப்படி பாராசூட் மெதுவா அழகா கீழே போகுதுன்னு எனக்குத் தெரியலியே! அதையும் கொஞ்சம் சொல்லேன்!”

அறிவியல் உண்மைகள்

நாம் ஏதாவது ஒரு பொருளை கீழே தூக்கி எறியும் போது, புவி ஈர்ப்பு விசை அந்தப் பொருளை கீழ் நோக்கி வேகமாக இழுக்கும். பொருளின் எடைக்கு ஏற்ப கீழே விழுகின்ற வேகம் மாறுபடும். எடை அதிகமான பொருட்கள் வேகமாக கீழே விழும். இறகு, காகிதம் போன்ற எடை குறைவான பொருட்கள் மிக மெதுவாக காற்றில் மிதந்து அதனோடு அழுத்தம் ஏற்படுத்தித் தரை இறங்கும்.

பாராசூட்  காற்றில் அழுத்தத்தை ஏற்படுத்தித் தரை இறங்கும் வேகத்தை வெகுவாக குறைக்கும். இதனால் தரை இறங்கும் பொருட்கள் சேதாரமின்றித் தரைக்கு வந்து சேரும். எனவே தான் விமானங்கள் பழுதாகும் வேளைகளில் தங்களை காத்துக்கொள்ள வேண்டிய அவசர நேரத்தில் பாராசூட் உபயோகிக்கப் படுகின்றது. பாராசூட்டின் உபயத்தால் குதிக்கும் வேகம் வெகுவாக குறைக்கப்பட்டு மனிதர்களால் பத்திரமாகத் தரையிறங்க முடிகிறது.

பாராசூட்டை முதன்முதலில் 1783ஆம் ஆண்டு லூயிஸ் செபாஸ்டின் என்பவர் கண்டபிடித்ததோடு இல்லாமல் மக்கள் முன்னிலையில் அதை உபயோகித்து குதித்தும் காட்டினார்.

பிண்டு, “எல்லாரும் இதை செஞ்சு பாருங்க, மறுபடியும் அடுத்த மாதம் உங்களை நானும், அனுவும் சந்திக்கிறோம். பாய் பூஞ்சிட்டூஸ்”.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments