“ஹாய் அனு, ஹாய் பூஞ்சிட்டூஸ்!”, என அழகாய் கிருஸ்துமஸ் தாத்தாவின் உடையில் வந்தது பிண்டு.

எப்போதும் பிண்டுவை ஆர்வமுடன் வரவேற்பவள், அன்று சோகமாக உம்மென்று இருந்தாள்.

“என்னாச்சு அனு? அம்மா திட்டிட்டாங்களா? சோகமா இருக்க!”, என்று கேட்டது பிண்டு.

“இல்ல பிண்டு, இந்த ஃபாரின்ல உள்ள குழந்தைங்க எல்லாம் கிருஸ்துமஸ் டைம்ல ஸ்நோவுல ஜாலியா விளையாடுவாங்கள்ள, ஸ்நோ மேன் எல்லாம் செஞ்சு என்ஜாய் பண்ணுவாங்க”, என்றாள் அனு.

“அவ்வளவு தானே! நம்மளும் விளையாடுவோம்”, என்று சிரித்தது பிண்டு.

“நம்ம ஊர்ல எப்படிப் பிண்டு ஸ்நோ வரும்?”.

“வரும். இதோ இந்த பெட்டிக்குள்ள தான் ஸ்நோ இருக்கு, கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள்”, என்று அனுவிடம் ஒரு பெட்டியைத் தந்தது பிண்டு.

snow

“என்னது இது? இந்தப் பெட்டிக்குள்ள ஸ்நோ இருந்தா ஈரமா ஆயிடாதா?”, என்று கேட்டபடி அதைத் திறந்தாள் அனு. 

பெட்டியில் இருந்த பொருட்கள்:

1. சோள மாவு

2. ஷேவிங் க்ரீம்

3. ஃபுட் கலர்ஸ்

“இதை வெச்சா ஸ்நோ செய்யப் போறோம்!”, என வியப்புடன் அனு கேட்க,

“ஆமாம் அனு, நீ போய் ஒரு பெரிய கிண்ணம் எடுத்துட்டு வா!”, என்று அனுவிடம் சொன்னது பிண்டு.

அனுவும் அதே போல் ஒரு பெரிய கிண்ணத்தைக் கொண்டு வந்தாள்.

செய்முறை:

1. முதலில் ஒரு சிறிய கப் அளவு சோள மாவினைக் கிண்ணத்தில் கொட்டிக் கொள்ளவும்.

2. பிறகு அதே அளவிலான சேவிங் க்ரீமை கரண்டியின் உதவியோடு எடுத்து சோள மாவின் மீது போடவும்.

3. அதன் மீது நாலு அல்லது ஐந்து சொட்டு ஃபுட் கலரினைப் போடவும்.

4. இப்போது அந்தக் கலவையைக் கையால் நன்கு கலக்கிப் பிசைய அது ‘க்ளே டோ’ பதத்தில் வந்துவிடும்.

5. ஒருவேளை உங்களின் கலவை பிசுபிசுப்பாகக் கையில் ஒட்டிக் கொள்வது போல் இருந்தால் கொஞ்சம் சோள மாவினை சேர்த்துக் கொள்ளவும்.

6. அல்லது உங்க கலவை ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் தனித்தனியே இருந்தால் கொஞ்சம் ஷேவிங் க்ரீமைச் சேர்த்துக் கொள்ளவும்.

7. அவ்வளவு தான், ஸ்நோ தயார். இதை வெச்சு ஸ்நோ மேன், ஸ்நோ ஏஞ்சல் இன்னும் என்னென்ன வேண்டுமோ அத்தனையையும் செய்யலாம்.

“சூப்பர், சூப்பர் பிண்டு, இப்ப நம்ம ஊர்லயும் ஸ்நோ வந்துடுச்சு ஜாலி”, என்று குதூகலித்தாள் அனு.

அனு, “ஆனா எப்படி இந்த ஸ்நோ வந்துச்சு? கொஞ்சம் சொல்லேன்”.

அறிவியல் உண்மைகள்:

ஷேவிங் க்ரீம் சின்னச் சின்ன குமிழிகளால் ஆனது. சோள மாவின் சிறு சிறு துகள்கள் அந்த குமிழுக்குள் சிக்கிக் கொண்டு, சர்ஃபேஸ் டென்ஷனில் மிதக்கும். இதனால் அது பஞ்சுப் பொதி அல்லது ஸ்நோ போன்ற வடிவத்தில் உருவாகும்.

“அடுத்த மாதம் மற்றொரு சுவாரஸ்யமான பரிசோதனையோடு வருகிறேன் நண்பர்களே! என்ன அனு இப்ப சந்தோஷமா?”, என்று அனுவைப் பார்த்து கேட்டது பிண்டு.

அனு, “ம்ம் ரொம்ப சந்தோஷம் பிண்டு, ஃப்ரெண்ட்ஸ், நீங்களும் உங்க வீட்டுல பனிப் பொதி செஞ்சு பாருங்க. பை பை”.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments