சிறு வயதில் எங்கள் வயதை உடைய சிறுவர்கள் ஆற்றுக்குச் சென்று களிமண் எடுத்து வந்து அதை பேஸ்ட் போலச் செய்து பொம்மைகள் செய்வார்கள். பெரும்பாலும் துப்பாக்கி, கார் இப்படி செய்வார்கள். எங்களுக்கு விளையாட பொம்மைகள் செய்து தரக் கேட்டால் கிடைக்காது. வெளியேயும் இப்போது போல பொம்மைக் கடைகள் கிடையாது. அது சமயம் எங்கள் பாட்டி எங்களுக்கு ஒரு வழி சொன்னார்.

paper1

வீட்டில் இருந்த பழைய செய்தித்தாள் பேப்பர்களை ஒரு பாத்திரத்தில் ஊற வைக்கச் சொன்னார். அதோடு கொஞ்சம் வெந்தயமும் கலந்து ஊற வைத்தோம். மறுநாள் காலையில் அது நன்றாக ஊறிவிட்டது. அதை எடுத்து வடிகட்டி, ஒரு உரலில் இட்டு பாட்டி நன்றாக ஆட்டினார்கள். அப்போதெல்லாம் மிக்ஸி கிடையாது. நன்றாக மை போல ஆட்டி எடுத்து ஒரு பாத்திரத்தில் போட அது பேஸ்ட் போல ஆகியிருந்தது.

இப்போது பாட்டி ஒரு வாய் அகன்ற பாத்திரத்தை, அதோடு சின்னதாக ஒன்று என்பதாக ஒரு மூன்று எடுத்து வந்தார்கள். கிட்டத்தட்ட டபராவில் மூன்று சைஸ். அதை கவிழ்த்து போட்டு அதன் மேல் ஒரு துணியை வைத்து மூடினார்கள். இப்போது அந்தத் துணி மேல் கையில் இருந்த பேப்பர் பேஸ்ட்டை மருதாணி வைப்பது போல் வைத்து நன்றாக ஒட்டி விட்டார்கள் இப்போது அது பார்ப்பதற்கு மருதாணி வைக்கப்பட்ட கவிழ்ந்த டபரா போல இருந்தது. அதை அப்படியே வெயிலில் வைத்தாகிவிட்டது. ஒரு நாள், இரண்டு நாள் நன்றாக காய்ந்தது. அதன் பின் அதை எடுத்து அந்தத் துணியோடு உருவ டபரா தனியாகவும் ஒரு பாத்திரம் போல் பேப்பர் டபரா தனியாகவும் கிடைத்தது. அதன் முனைகளை சீர்படுத்தி வண்ணமிட்டு வைத்துக் கொண்டோம்.

paper2

அதன் பெயர் குள்ளபுட்டி (கூடை) என்று பாட்டி சொல்வார்கள். அது போல பல செய்து, கோலமாவு போன்ற விஷயங்களுக்கு பயன்படுத்தினார் அவர்.

இப்போது இதை மிக்ஸியில் கூட அரைக்கலாம். அதை வைத்து நம் கற்பனைக்கு ஏற்றபடி விதவிதமான உருவங்கள் செய்து மகிழுங்கள் குழந்தைகளே.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments