குப்பையில் தூக்கி எறியும் தேங்காய் சிரட்டைகளை வைத்து, அழகிய முயல் செய்யலாமா?
தேவையான பொருட்கள்
- தேங்காய் சிரட்டைகள் – 2
- மெல்லிய அட்டை
- வண்ணங்கள்
- உப்பு காகிதம்
செய்முறை
முதலில், உப்பு காகிதம் கொண்டு, தேங்காய் சிரட்டையில் இருக்கும் நார்களை, தேய்த்து, நீக்கிக் கொள்ளவும்.
அடுத்ததாக, சிரட்டையில், கண்களை, துளையிட்டுக் கொள்ளவும். இங்கு தான், முயலின் காதுகளை வைக்கப் போகிறோம்.
இப்போது, சிரட்டைக்கு வண்ணம் தீட்டிக் கொள்ளுங்கள். முயலுக்கு, கண்,மூக்கு, வாய் எல்லாம் வரைந்து கொள்ளுங்கள். சிரட்டையின் மேல் பகுதியில், துளையில், காதுக்காக வெட்டி வைத்திருக்கும் அட்டையை வைக்கவும்.

இப்போது, அழகிய முயல், தயார்.