
குழந்தைகளே, இன்னைக்கு தானியங்கள் வைத்து அழகான கலை வேலைப்பாடு செய்யலாமா?
தேவையான பொருட்கள் :
அரிசி, துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, பாசிப்பயறு, கொள்ளுபயறு, துவரம்பருப்பு போன்ற சில வகை தானியங்கள்.
ஒட்டுவதற்கு பசை
வரைய பென்சில்
செய்முறை :
உங்களுக்கு விருப்பமானவற்றை வரைந்து கொள்ளுங்கள். எடுத்துக்காட்டாக, மலர், மரம், இப்படி உங்களுக்கு எது பிடிக்குமோ, அதை வரைந்து கொள்ளுங்கள்.
இப்போது, உங்கள் ஓவியத்திற்கு வண்ணம் தீட்டுவதற்கு பதிலாக, தானியங்களை ஒட்டி, உங்கள் ஓவியத்தை அலங்கரியுங்கள்.
தானியங்கள் கொண்டு உருவாக்கிய அழகிய கலைவண்ண ஓவியம் தயார்.
