அன் பெனும் கவிதை, அம்மா!
ஆல் போல், அரவணைத் திடுவாள்
இடுப்பில் சுமந்தே, சோறூட்டும் அன்னைக்கு
ஈடில்லை இவ்வுலகில், வேறு யாரும்!
உன்னால் முடியும் தம்பி யென்று
ஊக்கம் தந்து, உயர்த் திடுவாள்
என்னை மேலே ஏற்றி விட்டு
ஏணிப் படியாய், நின் றிடுவாள்
ஐப்பசி மழையின் சாரல் அம்மா!
ஒரு பொழுதும் சோர்ந் திடாமலே
ஓய் வின்றி உழைத் திடுவாள்
ஒளவைத்தமிழ் போல், என்றும் வாழ்க!
அஃதே என் வாழ்நாள் ஆசை!
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
பெயர் ஞா.கலையரசி. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை செய்து ஓய்வு. புதுவையில் வாசம். ஊஞ்சல் unjal.blogspot.com என் வலைப்பூ. புதிய வேர்கள் எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டுள்ளேன்.