நிலாப் பெண்ணே! நிலாப் பெண்ணே!
நில்லாமல் நீயும் வா!
சின்னக்கண்ணன் தேடுகிறான்
சீக்கிரமாய் ஓடி வா!


சிட்டுப் போலச் சிறகடித்துச்
சிரிப்புடனே பறந்து வா!
மாயக் கண்ணன் மயங்கிடவே
மகிழ்வுடனே நீயும் வா!

குழந்தைகளும் தினம் உனையே
கைதட்டி அழைக்கையிலே
நீலவானில் குதித்து நீயும்
சிரிப்புடனே வந்துவிடு!


உனைக் காட்டி உணவையுமே
ஊட்டுகின்ற அன்னையரும்
நேரில் வந்து நீயும் நின்றால்
மகிழ்ச்சியுடன் சிரிப்பாரே!


மலைமுகட்டில் மறையாதே!
மண்ணிலே நீ குதித்து வா!
குழந்தைகளின் மனம் களிக்க
குழந்தையாக மாறிவா!

guest
1 கருத்து
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments