அமைதியைப் பரப்பும் சடாகோவின் கொக்கு- சிறார் கதை
ஆசிரியர்:- எலினார் கோர்
தமிழாக்கம்:- ஆதி வள்ளியப்பன்
இந்த உண்மைக் கதையை எழுதிய எலினார் கோர், 1922 ல் கனடாவில் பிறந்தவர். இவரது புகழ் பெற்ற நூலான Sadako and the Thousand Paper Cranes,(சடாகோவும், ஆயிரம் காகிதக் கொக்குகளும்) 1977 ல் வெளியாகி 15 லட்சத்துக்கும் அதிகமான பிரதிகள் விற்றது.
இரண்டாம் உலகப் போரின் இறுதியில் ஹிரோஷிமா மீது, அமெரிக்கா வீசிய அணுகுண்டின் கதிர்வீச்சின் காரணமாக, சடாகோ சசாகி எனும் சிறுமி இரத்தப் புற்றுநோய்க்கு ஆளானாள். ஆயிரம் காகித கொக்குகள் செய்தால், நீண்ட நாள் வாழலாம் என்ற ஜப்பானியரின் நம்பிக்கையின்படி, அவள் ஆயிரம் கொக்குகள் செய்ய முயல்கிறாள். அவள் செய்து முடித்து நீண்ட நாள் வாழ்ந்தாளா? என்பதைக் கதையை வாசித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
மனதை மிகவும் நெகிழச் செய்த கதை.
வெளியீடு:- குட்டி ஆகாயம் சிறார் பதிப்பகம், கோயம்புத்தூர்.
9843472092 / 9605417123.
விலை:-₹ 50/-
பெயர் ஞா.கலையரசி. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை செய்து ஓய்வு. புதுவையில் வாசம். ஊஞ்சல் unjal.blogspot.com என் வலைப்பூ. புதிய வேர்கள் எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டுள்ளேன்.