வணக்கம் பூஞ்சிட்டூஸ்,
இன்னைக்கு நாம அடிக்கடி பார்க்கிற, தினமும் பயன்படுத்தும் நாணயம் மற்றும் ரூபாய் நோட்டுகளை பற்றி எவ்வளவு தெரிஞ்சு வச்சிருக்கோம்னு பார்க்கலாமா?
ஒரு விளையாட்டுடன் ஆரம்பிக்கலாமா?
நாணயம் அச்சு எடுத்து விளையாடி இருக்கீங்களா சிட்டுகளா?
ஒரு 5 ரூபாய் நாணயம் எடுத்து அதை ஒரு காகிதத்துக்குக் கீழ வச்சு பென்சிலால் நல்ல வண்ணம் தீட்டுற மாதிரி தீட்டுங்க.
தீட்டி முடிச்சுட்டீங்களா சிட்டுகளே,
இப்போ பாருங்க , அந்த நாணயத்துல உள்ள அச்சு உங்களுக்குத் தெரியுதா?
என்னலாம் தெரியுது ?
ரூபாய் அடையாளம் , நாணயத்தின் மதிப்பு அதாவது 5 ரூபாய் நாணயத்துல எண் 5 தெரியும், அப்புறம் நாணயம் அச்சிட்ட வருடம், பூ வடிவம் தெரியும்.
ஒரு விரல் வடிவம் ஒரு ரூபாய் நாணயத்துல தெரியும்.. இரண்டு ரூபாய் நாணயத்துல இரண்டு விரல் தெரியும். அப்புறம் பின்புறம் அச்சு எடுத்துப் பாத்தீங்கன்னா
நம்ம தேசிய சின்னம் இருக்கும்.
ஹிந்தில ஏதோ எழுதியிருக்குதே? அது என்ன தெரியுமா? “சத்யமேவ ஜெயதே” னு எழுதியிருக்கும். அதாவது “வாய்மையே வெல்லும்”.
“இந்தியா” னு ஆங்கிலத்திலும் “பாரத்” னு ஹிந்தியிலும் எழுதியிருக்கும் சிட்டுஸ்.
இத தவிர வேற ஏதாவது நீங்க பார்த்தீங்கன்னா சொல்லுங்க குட்டீஸ்!
இதே மாதிரி நம்ம ரூபாய் நோட்டுகளிலும் நாம கவனிக்க வேண்டியது நிறைய இருக்கு செல்லங்களே.
நம்ம ரூபாய் நோட்டுகளில் 15 மொழிகளில் ரூபாய் நோட்டின் மதிப்பு எழுதப்பட்டிருக்கும். ஒரு பக்கத்தில் சர்வதேச மொழியான ஆங்கிலத்திலும், நமது தேசிய மொழியான ஹிந்தியிலும் எழுதப்பட்டிருக்கும்.
நம்ம ரூபாய் நோட்டுகளில் இடம் பெற்றிருக்கும் படங்களைக் கவனிச்சிருக்கீங்களா?
2000 ரூபாய் நோட்டில், மங்கள்யான் செயற்கைக் கோள் படம் இருக்கும்.
500 ரூபாய் நோட்டில் டெல்லி செங்கோட்டை படம் இருக்கும்.
100 ரூபாய் நோட்டில், குஜராத் மாநிலத்திலுள்ள ராணி உதயமதி கட்டிய படிக்கிணறு படம் இருக்கும்.
50 ரூபாய் நோட்டில் கர்நாடக மாநிலத்திலுள்ள ஹம்பி தேர் உள்ளது.
20 ரூபாய் நோட்டில் மஹாராஷ்டிர மாநிலத்திலுள்ள எல்லோரா குகை படம் உள்ளது.
10 ரூபாய் நோட்டில் ஒடிஷா மாநிலத்திலுள்ள கொனார்க் சூரியக் கோவில் படம் உள்ளது.
பார்வையற்றவர்கள் பயன்படுத்துற வகையில் பிரெய்லி முறையும் ரூபாய் நோட்டுகளில் இருக்கும்.
இன்னும் நிறைய நீங்க கவனித்த விஷயங்களை சொல்லுங்க குழந்தைகளே!
எழுத வேண்டிய மின்னஞ்சல்: keechkeech@poonchittu.com
Soooooooooooper
Thank you 🙂