வணக்கம் பூஞ்சிட்டுகளே…. எல்லாரும் நலமா.. நானும் நலம்..சரி, இந்த மாதம் ஊர் கதை கேட்க பூஞ்சிட்டுகள் தயார் தானே..

இன்னைக்கு நாம பாக்கப்போற முதல் ஊர், பச்சை பசேல்ன்னு பசுமை நிரம்பி வழியுற பொள்ளாச்சி.

கொங்கு மண்டலமான கோயமுத்தூர் மாவட்டத்துல இருக்கிற பொள்ளாச்சி நம்ம தமிழகத்துல இருக்கிற வளமையான ஊர்கள்ல ஒன்னு. வார சந்தை, கருப்பப்பட்டி வெல்லம், கால்நடை சந்தைன்னு பல தொழில்களுக்கு பெயர் போன ஊர் பொள்ளாச்சி. அது மட்டுமில்லாம பொள்ளாச்சியில் கம்பீரமா இயற்கை எழிலோட உயர்ந்து நிக்கிற மேற்கு தொடர்ச்சி மலைகளையும், அதன் அடிவார வளங்களையும், அதை சுற்றி வளர்ந்து குலுங்கும் வயல்களையும் காட்ச்சிப்பிடிக்காத கேமெராவே இல்லைன்னு சொல்கிற அளவுக்கு திரைப்படத்துறைக்கு தீனி போடும் அழகிய ஊர்களில் பொள்ளாச்சிக்கும் முக்கியமான பங்குண்டு. இப்படிப்பட்ட தனி சிறப்புகள் கொண்ட பொள்ளாச்சிக்கு எப்படி இந்த பேரன்னு தானே யோசிக்கிறீங்க.. அடுத்து அங்க தான் வரேன்..

சோழர் காலத்துல முடி கொண்ட சோழ நல்லூர் என்று வழங்கப்பட்ட பொள்ளாச்சியோட உண்மையான பெயர் ‘பொழில் வாய்ட்சி’. பொழில் என்றால் அழகு, வளமை ,செழிப்பு என அர்த்தமாகும். செழிப்பு வாய்ந்து இயற்கையே ஆட்சி செய்த ஊர் என்பதால் பொழில் வாய்ட்சி’ன்னு ஊருக்கு பேர் வந்துச்சாம். அதுவே கொஞ்ச காலத்துக்கு பிறகு ‘பொருள் ஆட்சி’ என்று ஆகி காலப்போக்குல பொள்ளாச்சி ஆகிருச்சாம்.

வால்பாறை, ஆனைமலை வனவிலங்கு சரணாலயம் , பரம்பிக்குளம் சரணாலயம், ஆழியார் அணை , சோலையார் அணை’ன்னு மனிதர்களுக்கு மட்டுமில்லாம வன விலங்குகளுக்கும் மிகப்பெரிய வீடாக இருக்கும் நம்ம பொள்ளாச்சி நம்ம தமிழக இயற்கை வளத்துக்கு ஒரு வரப்ப்ரசாதம்ன்னே சொல்லலாம்..

பொள்ளாச்சி போலவே கொங்கு மண்டலத்தின் பகுதியாக ஒரு காலத்தில் இருந்தது சேலம். பொள்ளாச்சி போலவே சேலத்துக்கு பின்னாடியும் ஒரு அழகான பெயர்க்காரணம் உண்டு.

சேலம் அந்த காலத்துல அதாவது ஆங்கிலேயர்கள், சுல்தானியர்கள் , நாயக்கர்கள், சோழர்கள் முன்பு சேர மன்னர்கள் வசம் இருந்த ஊர். சாலிய சேர மண்டலம்’ன்னு ஒரு கோர்வைக்குள் இருந்த பகுதி, கொஞ்ச காலத்துக்கு பிறகு சேரலம்’ன்னு வழங்கப்பட்டதாம். அதுவே பின்னாளில் மருவி சேலம்ன்னு ஆகியிருக்கிறதா வரலாற்று ஆய்வாளர்கள் சொல்ராங்க. சேலத்தோட முக்கியமான மலைத்தொடர் சேர்வராயன் மலை. அரையன் என்றால் அரசன் என்ற இன்னொரு அர்த்தம் உண்டு. அதனால சேரன் ஆண்ட மலை சேர்வராயன் மலை என்றும் சேர மண்டலமே மருவி சேரலம் ஆகி சேலம் ஆனதும் வரலாறு எவ்வளவு சுவாரசியமானது’ன்னும் தெரியுது..

சேலம் நம்ம தமிழிகத்துல பழைமையான ஊர்களில் ஒன்று. இங்க கற்கால மனிதன் பயன்படுத்தின ஆயுதங்கள், சுத்தியல்கள், பானைகள், வளையல்கள் எல்லாம் கிடைச்சிருக்காம். அதோட ஏகப்பட்ட நடுக்கற்களும் கிடைச்சிருக்காம்.. இவ்வளவு சிறப்புகள் இருந்தாலும் எனக்கு ரொம்ப பிடிச்சது நம்ம சேலம் மாம்பழம் தான்.. அட அட அட.. என்ன ருசி.. அதுவும் சேலத்து மல்கோவா ருசி இருக்கே… இப்பவே நாவூறுது.. என்ன குட்டீஸ்.. உங்களுக்கு தானே.. அதுவும் மாம்பழ சீசன் வேற.. பிறகென்ன.. அம்மா கிட்ட சொல்லி, மாம்பழம் வாங்கி ஒரு பிடி பிடிங்க.. வைட்டமின் சி கொட்டிக்கிடக்கிற மாம்பழத்த ருசிக்கும் போது மறக்காம சேலத்து பெயரையும் மனசுக்குள்ள அசைப்போடுங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *