ஒரு காட்ல  ஒரு எறும்புத்திண்ணி இருந்துச்சாம்.  ஒவ்வொரு எறும்புப்புத்தா தேடிப் போய் அங்க இருக்க எறும்பை எல்லாம் சாப்டுடும். 

ஆனா, கொரனா ஊரடங்கு போட்டதால, அதனால வெளில போய் சாப்பிட முடியலையாம். ஆனா அதுக்கு   ரொம்ப பசிச்சதாம்.

அப்ப ஒரு நாள் ஊரடங்கு தளர்வு குடுத்தாங்களாம். ரொம்ப நாளா பசியோட இருந்த எறும்புத்திண்ணி அன்னிக்கு மாஸ்க், க்ளவுஸ் எல்லாம் போட்டுக்கிட்டு உணவு தேடி ஒவ்வொரு எறும்பு புத்தா அலைஞ்சிச்சாம்.

ஆனா எங்கயுமே அதுக்கு எறும்பே கிடைக்கலயாம். ஏன்னா எல்லா எறும்பும் லாக்டவுன் போட முன்னாடியே அவங்க பெரிய எறும்பு நாட்டுக்கு போய் தங்களை தனிமைப்படுத்திக் கிட்டு ஊரோட தங்கிடுச்சாம்.

இது தெரியாத எறும்புத்திண்ணி ஒவ்வொரு புத்தா தேடிப் பார்த்து சுத்தி சுத்தி ஒரு வழியா எறும்புத்தீவு பக்கத்துலயே வந்துடுச்சாம்…

எறும்புத்திண்ணி வர்றத தெரிஞ்சிக்கிட்ட ஒற்றர் எறும்புகள் அந்த விசயத்த வேகமா போய் அவங்க தீவோட ராணி எறும்புகிட்ட சொல்லுச்சாம்.. 

ராணி எறும்புக்கும் என்ன செய்யறது எப்படி எல்லா எறும்புகளையும் காப்பாத்துறதுன்னு தெரியலையாம்… திவுல இருந்த எல்லா எறும்புகளும் ரொம்ப பதட்டமாக ஆரம்பிச்சிடுச்சாம்..

அப்ப சில வயசான எறும்பு படைகள், “நம்ம இளம் சந்ததிக்காக நாங்க தியாகம் செய்றோம்.. நாங்க போய் எறும்புத்திண்ணி க்கு உணவாகுறோம்னு” முன் வந்ததாம்..

அப்ப கூட்டத்துல இருந்த ரெண்டு குட்டி எறும்புங்க நாங்க பேசலாமானு கேட்டுச்சாம்.. 

ராணி அனுமதி கொடுத்ததும் கவின், தருண்ணு ரெண்டு பொடியன் எறும்புகள் மேடைக்கு வந்ததாம்..

“நாம பலத்தால செய்ய முடியாதத நம்ம புத்திசாலித்தனத்தால செய்யனும்னு எங்க ஆசிரியர் சொன்னாங்க., அதனால நாம புத்திசாலித்தனமா அந்த பெரிய விலங்கை எதிர்கொள்ளலாம்” அப்டின்னு சொன்னாங்களாம் கவினும் தருணும்.

“சரி நீங்க என்ன செய்யனும்னு சொல்லுங்க” அப்டின்னு கேட்டாங்க எறும்பு ராணி.

சரின்னு குட்டி எறும்புகள் சொன்ன யோசனையைக் கேட்டு எல்லா எறும்புகளுக்கும் உற்சாகம் ஆகிடுச்சு.. எல்லாரும் குட்டி எறும்புங்க சொன்னத செஞ்சிட்டு எறும்புத்திண்ணி வர்றதுக்காக காத்திருந்தாங்க.

அங்க சுத்தி இங்க சுத்தி எப்படியோ எறும்புத்திண்ணி அந்த தீவுக்கு வந்துடுச்சு. ஆனா, அந்த தீவோட முகப்புல இருந்த தகவல் பலகைய பார்த்து எறும்புத்திண்ணி அதிர்ச்சி ஆகிடுச்சு..

ஏன்னா, தகவல் பலகைல..

“தனிமைப்படுத்தப்பட்ட பகுதி.. எச்சரிக்கை.இங்கு கொரனாவை விட கொடிய எறும்புனா வைரஸ் பரவியுள்ளது. இப்பகுதிக்குள் நுழையும் அனைவருக்கும் நோய் தாக்கும் வாய்ப்பு மிக அதிகம்.. மேலும் எறும்புத்திண்ணிகளே அதிகமாக மரணமடைவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன…” அப்டின்னு எழுதி இருந்தது.

erumbu

இதப் பார்த்ததும் ரொம்பவே பயந்த எறும்புத்திண்ணி உணவே இல்லைன்னாலும் பரவாயில்ல ஆனா, இந்த தீவுக்குள்ல போயி நோய் வாங்கிக்க கூடாதுன்னு திரும்பி ஓட ஆரம்பிச்சுடுச்சி..

ஆனா எறும்புத்திண்ணிக்கு ரொம்ப பசிச்சதால ரொம்பவே சோகமா நடந்து போச்சு ..

அது மேல இரக்கப்பட்ட தருண் எறும்பும் கவின் எறும்பும் , வழில இன்னொரு தகவல்பலகை வச்சிருந்தாங்க.

அதுல.., “பசிக்கிறதா இப்போதே ஆன்லைனில் ஆர்டர் செய்யுங்கள் சூடான சீரக புலாவ்..”அப்டின்னு ஒரு போர்ட் இருந்தது…

சீரகம் பார்க்க எறும்பு போலவே இருந்ததால எறும்புத்திண்ணி உடனே அந்த உணவகத்துல உணவு கேட்டு நல்லா திருப்தியா சாப்டுடுச்சாம்..

கவின் தருணோட அறிவுக்கூர்மைய பாராட்டி தீவுல அவங்களுக்கு சிறப்பான விருந்து வச்சாங்களாம் ராணி எறும்பு.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments