கிராமப்புறப் பள்ளியான தணிகை அரசுப்பள்ளியில், இலவசக் கல்வி, இலவச உணவு அளித்தும், அங்கிருந்த விக்டோரியா ஆங்கிலப் பள்ளியில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்கவே, பெற்றோர் விரும்புகின்றனர். மாணவர் எண்ணிக்கை குறைந்து வருவதையடுத்து அரசுப்பள்ளியின் தலைமை ஆசிரியர் கிராமங்களுக்குச் சென்று, பிள்ளைகளை அரசுப்பள்ளிக்கு அனுப்புமாறு கேட்கின்றார். பேருந்து இருந்தால் அனுப்புவதாக அவர்கள் சொல்லவே பேருந்தை வாங்குவதற்கான முயற்சிகளில் அவர் ஈடுபடுகின்றார்.

இதன் காரணமாகத் தனியார் பள்ளிக்கும், அரசுப்பள்ளிக்கும் மோதல் ஏற்பட்டு போட்டியாக உருமாறுகின்றது.  இந்த அனுபவங்களை  வேடிக்கையாகவும் விறுவிறுப்பாகவும் விவரித்திருக்கின்றார் ஆசிரியர்.

வாசிப்பதற்குச் சுவாரசியமான சிறுவர் நாவல்.

நீலச்சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து – சிறுவர் நாவல்

ஆசிரியர்:- எஸ்.ராமகிருஷ்ணன்

வெளியீடு:- தேசாந்திரி பதிப்பகம், சென்னை. (044-23644947)

விலை:- ₹ 70/-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments